சிகரெட் பிடித்தால் மூளை பாதிப்படையும், ஞாபகசக்தி,பகுத்தறிவு திறன் குறைவடையும் என தெரியவந்துள்ளது.
லண்டனை சேர்ந்த கிங்ஸ் கல்லூரியின் நிபுணர்கள் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மூளை பாதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வு 50 வயதுக்கும் மேற்பட்ட 8,800 பேரிடம் நடத்தப்பட்டது. அதில் உயர் ரத்த அழுத்தத்தால் இந்த நோய்கள் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதற்கு சிகரெட் புகைப்பது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. சிகரெட் பிடிப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்படுவதுடன் அல்சீமர் என்ற ஞாபக மறதி, பகுத்தறிவு குறைதல், கல்வி அறிவு குறைதல் போன்றவை ஏற்படுகிறது.
இது தவிர உடலில் கொழுப்பு சத்து அதிகரித்தல், உடல் பருமன் அதிகரிப்பு போன்றவையும் ஏற்படுகிறது.
எனவே முடிந்தவரையில் புகைப்பதை நிறுத்தி விட்டு, சத்தான உணவு பண்டங்களை நேரம் தவறாமல் சாப்பிட்டு உடல் நலத்தை பேணி காக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.