நமது மூளையை நாம் எவ்வாறு பாவிக்கின்றோம்?நாம் நமது மூளையில் 20 வீதத்தை மட்டும் தான் பாவிக்கின்றோம். மிகுதியாகவுள்ள 80 வீதம் சும்மா தான் இருக்கின்றது. இந்த மிகச்சிறிய 20 வீதத்தை மட்டும் தான் பாவிக்கின்றோம் என்றால் மிச்சம் உள்ள 80 வீதத்தில் என்ன ஒழிந்திருக்கக் கூடும்?
ஒரு வேளை இது அபிவிருத்திக்காக இருக்கலாம். அல்லது மிகப் பெரிய தகவல்களை எதிர்கால நலன் கருதி இந்த 80 வீதமான பகுதியில் சேமித்து வைக்கக் கூடும். மனித இனம் தான் மிக அறிவுக்கூர்மையுள்ள இனம். அதன் பயன் தான் நாம் இன்று காணும் அனைத்தும்.
ஒரு படத்தைப் பார்த்த பின் அது குறித்த நினைவுகள் எம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். இப்படித்தான் எல்லோருக்கும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். எப்படியோ நமது மூளையின் 20 வீதத்தை மட்டுமே உபயோகிக்கிறோம், மீதி 80 வீதம் என்ன செய்யக் கூடும் என்பதை எம்மால் ஊகிக்க மட்டுமே முடியும். நமது மூளையில் தெய்வீகப் பகுதி என்று ஒன்றிருந்தால் நாம் அதைத் தட்ட முயற்சிப்போம்.
அன்றாடம் உங்கள் மூளைக்குப் பயிற்சி வழங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எத்தனை மூளை செல்களை இதன் மூலம் நீங்கள் இழந்தாலும் பரவாயில்லை. காரணம் எமது மூளை புதிய நியூரான்களை எம்முடைய வாழ்நாள் முழுதும் உற்பத்தி செய்யும். எவ்வாறாயினும் அவை தானாக வருவதில்லை, நீங்கள் உங்கள் மூளைக்கு பயிற்சி வழங்குவதன் மூலமே உருவாகின்றன.
கொழுப்பு மற்றும் புரதங்களை உள்ளடக்கிய 1.4 கிலோகிராம் எடையுள்ள மூளை உடலின் மிகப்பெரிய உறுப்பாக உள்ளது. மூளையில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை தான் சமிபாடு, சுவாசம் போன்ற செயற்திறன் முகாமைத்துவத்திற்கு காரணமாக இருக்கின்றன.
டென்ட்ரைட்ஸ் மற்றும் அக்சான்ஸ் எனப்படும் மில்லியன் கணக்கான நரம்பு நார்களுடன்; தொடர்புடைய நியூரான்கள் எலக்ட்ரோ கெமிக்கல் குறியீடுகளை ஒருங்கிணைத்து கடத்துகின்றன. இந்த மூளையின் சேமிப்பு கொள்ளளவு 1000 TB. தற்போது நாம் கொண்டுள்ள வெளிப்புற கணனி தட்டுக்களின் கொள்ளளவு 1TB ஆகும்.
இது மிக அதிகம் இல்லை. எனவே, தேவையில்லாத விடயங்களை நிரப்பி உங்களுடைய மூளையின் கொள்ளளவை வீணாக்காதீர்கள்