பிரபஞ்சத்தின் விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் தென்படுவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரபஞ்சத்தின் ஆழத்தில் தென்படும் இந்த விண்மீன் திரள்களின் கூட்டத்துக்கு “லார்ஜர் குவாசர் குரூப்” என பிரிட்டன் ஜெரெமியா ஹாராக்ஸ் இன்ஸ்டிடியூட்டின் விஞ்ஞானி ரோஜர் க்ளோவ்ஸ் பெயரிட்டுள்ளார்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், புதரை போன்று தென்படும் இந்த விண்மீன் திரள்களின் மையத்தை சூப்பர் நோவா கறுப்பு துளைகள் உருவாகியிருக்ககூடும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இதன் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு செல்ல 4000 மில்லியன் ஒளியாண்டுகள் தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது.