கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Empty
PostSubject: காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்   காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Icon_minitimeMon Jan 14, 2013 5:01 pm

காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம் Kadu10

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது. தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது குறிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பின் 9.4% அல்லது மொத்த நிலப்பரப்பின் ஏறத்தாழ 30% காடுகளினால் மூடப்பட்டுள்ளது. முன்னர் காடுகள் நிலப்பரப்பின் 50% வரை மூடியிருந்ததாக மதிப்பிட்டுள்ளனர். உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள்காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. உயிர்க்கோளத்தில் முக்கியமான அம்சமாக விளங்கும் காடுகள், பல உயிரினங்களுக்குப் புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள் உண்டு.

தாசுமேனியாவில் உள்ள மிதவெப்பவலய மழைக்காடு

காடுகளை, மரங்களை அடிப்படையாகக் கொண்டே வகைப்படுத்துவது வழமை எனினும், காட்டுச் சூழல்மண்டலம் , பல்வேறு வகையான விலங்குகள் , நுண்ணுயிர்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. அத்துடன், ஆற்றல் சுற்றோட்டம், உணவு வட்டம் போன்ற இயற்பியல் மற்றும் வேதியியல் சார்ந்த செயற்பாடுகளும் இதற்குள் அடங்குவன. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகளின் சில வகைகளாகும்.

வெப்பமண்டலக் காடுகள்

உலகில் வாழும் 50 சதவீத உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடு
காடுகள் பல்வேறு தளங்களால் ஆன அமைப்புக் கொண்டவை. இவற்றில் மரங்களின் மேல் பகுதிகளால் ஆன மேல்தளமும், உயரம் குறைந்த தாவரங்களினால் ஆன கீழ்த்தளமும் அடங்கும். சிக்கல்தன்மை கூடிய காடுகளில் ஐந்து தளங்கள்வரைஇருக்கும். மிகவும் உயரத்தில் உள்ள மேல்தளம் உயர் மரங்களின் மேற்பகுதிகளால் ஆனது. அதற்குச் சற்றுக் கீழுள்ள தளம் நடுத்தர உயரம் கொண்ட சிறு மரங்களால் ஆனது. அதற்குஅடுத்த தளம் உயரம் குறைவான குறு மரங்களினால் அமையப் பெற்றது. மேலிருந்து நான்காவது நிலையில் உள்ள தளம் செடிவகைகளைக் கொண்டிருக்கும். ஐந்தாவதான நிலத்தளம் புல் , பூண்டுகளினால் ஆனது. நான்காவது, ஐந்தாவது தளங்கள் முறையே செடித்தளம் , பூண்டுத்தளம் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. சில வேளைகளில் நில மட்டத்தில் பாசிகளைக் கொண்டஒரு தளமும் இருப்பது உண்டு.

வளம் மிகுந்த நிலப்பகுதிகளில் அமைந்த பெருங்காடுகளிலேயே ஐந்து தளங்களைத் தெளிவாகக் காண முடியும். வளம் குறைந்த பகுதிக் காடுகளில் பெரும்பாலும் மேல்தளம், கீழ்த்தளம், நிலத்தளம் என மூன்று தளங்களையே இனங்காண முடியும். வளமற்ற வரண்ட பகுதிகளில் உள்ள காடுகள் சிலவற்றில் தளங்களைத் தெளிவாக இனங்கண்டுகொள்ள முடியாத வகையில் இடைப்பட்ட நிலைகளிலும் தாவரங்கள் இருப்பதைக் காணலாம்.

சுவிட்சர்லாந்தின் அல்ப்சு தேசியப் பூங்கா பகுதியில் உள்ள ஊசியிலைக் காடு

மரங்கள் வளர்வதற்கு உகந்த எல்லாப் பகுதிகளிலும் காடுகளைக் காண முடியும். அடிக்கடி தீப்பிடிக்கும் வாய்ப்புள்ள இடங்களையும், மனித நடவடிக்கைகளினால் மாற்றங்களுக்கு உள்ளான சூழல் கொண்ட இடங்களையும், வேறுவகையில் பாதிப்புகளுக்கு உள்ளான இடங்களையும் தவிர்த்து, மரம் வளர் எல்லைக்கோட்டுக்கு உட்பட்ட எல்லா உயரங்களிலும் காடுகள்உள்ளன. 10° வடக்கில் உள்ள குறுக்குக் கோட்டுக்கும், புவிமையக் கோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள காடுகள் பெரும்பாலும் வெப்பவலய மழைக்காடுகளும் , 53° வடக்கு 67° வடக்கு ஆகிய குறுக்குக் கோடுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள காடுகள் வடதுருவப்புலக் காடுகளும் ஆகும். பொது விதியாக பூக்கும் தாவர வகைகளைக் கொண்ட அகன்ற இலைக் காடுகளில் , வித்துமூடியிலித் தாவர வகைகளைக் கொண்ட ஊசியிலைக் காடுகளில் இருப்பதிலும் பார்க்கக் கூடுதலான இனங்களைக் காணமுடியும். எனினும் இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன.

காடுகளைப் பல்வேறு வழிகளில்வகைப்பாடு செய்துள்ளனர். அவற்றுள் ஒன்று காடுகள் அமைந்துள்ள உயிர்ச்சூழலை அடிப்படையாகக் கொண்டது. இந்த் வகைப்பாட்டில் அக் காடுகளில் உள்ள முதன்மையான தாவர வகைகளின் இலைகளின் இருப்பு நிலையும் (பசுமையிலைத் தாவரம், இலையுதிர் தாவரம்) கவனத்தில் கொள்ளப்படுகிறது.இன்னொரு முறையிலான வகைப்பாடு காட்டிலுள்ள முதன்மை இனங்கள் அகன்ற இலைத் தாவரங்களா, ஊசியிலைத்தாவரங்களா என்பதை அடிப்படையாகக் கொண்டது.

மடகாசுக்கரில் உள்ள அடர்த்தியற்ற ஒரு காடு.

பலரும் பல்வேறு வகைப்பாட்டுமுறைகளை முன்மொழிந்திருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக எதுவும் அமையவில்லை. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் , உலகக் காப்புக் கண்காணிப்புமையம் என்பன இணைந்து உருவாக்கிய வகைப்பாடு பிற வகைப்பாடுகளை எளிமையாக்கி உருவாக்கியது ஆகும். இந்த முறை உலகின் காடுகளை 26 முதன்மை வகைகளாக வகைப்படுத்துகிறது. இது, காலநிலை வலயங்களையும், மரங்களின் வகைகளையும் கருத்தில் கொள்கிறது. இந்த 26 வகைகளையும், 6 பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை:

1. மிதவெப்ப ஊசியிலைக் காடுகள் ,
2. மிதவெப்ப அகலிலை மற்றும் கலப்பிலைக் காடுகள் ,
3. வெப்பவலய ஈரக் காடுகள் ,
4. வெப்பவலய வரண்ட காடுகள் ,
5. அடர்த்தியற்ற காடுகளும் புற்றரைக் காடுகளும் ,
6. வளர்ப்புக் காடுகள்
என்பன.

நன்றி :அறிவுலகம்
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» எரிதங்கள் (Spam) - ஒரு விளக்கம்
» விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம்
»  நாடுகளும் அதன் தலைநகரங்களும்
» இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
» பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: பொதுஅறிவு.-
Jump to: