கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Empty
PostSubject: முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?   முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? Icon_minitimeMon Jan 14, 2013 4:19 pm

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது? First_12

தெருநாய் கடித்தால், ‘ரேபீஸ்’ என்னும் ‘வெறிநோய்’ வரும் என்று பலருக்கும் தெரியும். இது உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து நிறைந்தது. உலகில் வெறிநாய்க்கடியால் இறப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. அதே நேரத்தில் நாம் சற்றுக் கவனமாக இருந்தால் இந்த நோயைத் தடுப்பதும் எளிது.

வெறிநோய் எப்படி வருகிறது?

‘ரேபீஸ்’ எனும் கொடிய வைரஸ் கிருமிகள் காரணமாக இந்த நோய் வருகிறது. இந்த வைரஸ்கள் தெருநாயின் உமிழ்நீரில் வசிக்கும். வெறிநோயுள்ள தெருநாய்கள் மனிதர்களைக் கடிக்கும்போது, கடிபட்ட நபருக்கு வெறிநோய் வந்துவிடும்.

அறிகுறிகள் என்ன?

இந்த நோயாளிகள் தண்ணீரைக் கண்டாலே பயந்து அலறுவார்கள். இதுதான் இந்த நோய்க்கு முக்கிய அறிகுறி. இவர்களுக்குத் தொண்டைச் சதைகள் சுருங்கிவிடுவதால் தண்ணீர் குடிக்கவோ, உணவு சாப்பிடவோ முடியாது. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் தண்ணீரைப் பார்த்தாலே தொண்டைச் சதைகள் இறுகி, சுவாசத்தை நிறுத்திவிடும். இதனால் உயிர் போவது போன்ற உணர்வு உண்டாகும். இதற்குப் பயந்துகொண்டு தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இதற்குத் ‘தண்ணீர் பயம்’ என்று பெயர். சுவாசிக்க சிரமப்படுவார்கள். வலிப்பு வரும். அதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்து வரும்.

என்ன செய்ய வேண்டும்?

நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தை உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும்.

வேகமாக விழுகிற குழாய்த் தண்ணீரில் காயத்தைக் கழுவுவது இன்னும் நல்லது.

காயம் ஆழமாக இருந்தால் காயத்தை நன்கு விலக்கிச் சுத்தப்படுத்த வேண்டும்.

காயத்தின் மீது டெட்டால் அல்லது ஸ்பிரிட் தடவ வேண்டும்.

தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று, முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

என்ன செய்யக்கூடாது?

காயத்துக்கு கட்டுப் போடக்கூடாது. சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்துவிடும் என்பதால் காயத்தை மூடாமல் வைத்திருப்பது நல்லது. திறந்த காயமென்றாலும், ஆழமான காயமென்றாலும் தையல் போட்டு மூடக்கூடாது.
நாய் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றைத் தடவக் கூடாது. அப்படித் தடவினால் கிருமிகள் உடலை விட்டு வெளியேறுவது தடைபடும்.

தடுப்பூசி முக்கியம்!

நாய் கடித்துவிட்டால் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சாதாரண நாய் கடித்தால் ஒரு டெட்டனஸ் தடுப்பூசி போதும். கடித்தது வெறிநாயாக இருந்தால், ‘வீரோரோப்’ எனும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். கடித்த நாளில் முதல் ஊசியும், அதன் பிறகு 3, 7, 14, 28-ம் நாள்களில் என்று மொத்தம் 5 முறைத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். திறந்த காயமென்றால் காயத்தைச் சுற்றிலும் நாய் கடித்த இடத்தைச் சுற்றிலும் ‘இமுனோகுளாபுலின்’ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாய் கடித்த நபருக்கு வெறிநோயிலிருந்து முழுவதுமாக விடுதலை கிடைக்கும். இந்தத் தடுப்பூசி இலவசமாக அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது.

நாய்க்குத் தடுப்பூசி

வீட்டில் நாய் வளர்ப்போர் நாய்க்குட்டிக்கு இரண்டு மாதம் முடிந்ததும் ஒரு தடுப்பூசி, மூன்று மாதம் முடிந்ததும் ஒரு தடுப்பூசி போட்டுவிட வேண்டும். அதன்பிறகு ஆண்டுக்கு ஒருமுறை இதே தடுப்பூசியைப் போட வேண்டும். முக்கியமாக, வீட்டுநாயைத் தெருநாயோடு பழகவிடக்கூடாது. அப்போதுதான் வீட்டு நாய்க்கு வெறிநோய் வராது.


டாக்டர் கு.கணேசன்
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்யும் முதலுதவி
» நீங்கள் செய்யும் வேலையை எவ்வாறு விரும்பிச் செய்வது
» MS Office Template - களை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?
» எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி
» எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: பொதுஅறிவு.-
Jump to: