இணையத்தில் வீடியோக்களை தரவிறக்க கன்வர்ட் செய்ய இலவச மென்பொருள் [You must be registered and logged in to see this link.]இணையத்தில் ஏராளமான வீடியோ பகிரும் தளங்கள் காணப்படுகின்றன. நமக்குப் பிடித்த படங்களைத் தரவிறக்கி கணிணியில் பார்த்துக் கொள்வோம் என்று நினைப்போம். ஆனால் சில வீடியோ இணையதளங்கள் தரவிறக்க நேரடியாக சுட்டி கொடுத்திருக்க மாட்டார்கள். அதனைத் தரவிறக்க வேறு தளங்கள் வழியாக சென்று தரவிறக்குவோம். சில தளங்களில் தரவிறக்கும் போது பாதி வரை டவுன்லோடு செய்யப்பட்டு திடிரென்று நின்று விடும். இந்த மாதிரி இணையத்திலிருந்து படங்களைத் தரவிறக்குவதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன.
இந்த சிக்கல்கள் இல்லாமல் இணையத்தில் 280 தளங்களிலிருந்து படங்களைத் தரவிறக்க உதவும் இலவச மென்பொருள் தான் Kastor All video Downloader. இதன் மூலம் Youtube, dailymotion, vimeo, google video போன்ற தளங்களில் காணப்படும் வீடியோக்களை எளிதாக தரவிறக்க முடியும். அது மட்டுமின்றி இந்த மென்பொருள் உள்ளிணைந்த வீடியோ என்கோடர்களைக் கொண்டிருக்கிறது. இதனால் தரவிறக்கிய வீடியோக்களை குறிப்பிட்ட கருவிகளுக்கேற்ப வேறு வடிவங்களில் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் Avi, Wmv, mpeg, Mp4, Mov போன்ற வகைகளில் உடனே எளிதாக கன்வர்ட் செய்து கொள்ளலாம். அதனால் நமது வேலையும் மிச்சமாகிறது.
இந்த மென்பொருள் பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கும் வசதியை (Batch Downloading) ஆதரிக்கிறாது. நமக்குத் தேவையான வீடியோ இருக்கும் இணைய முகவரியை மட்டும் ஒவ்வொன்றாகச் சேர்த்து விட்டு Download என்று கொடுத்தால் ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் தரவிறக்கலாம்.
இதில் இருக்கும் இன்னொரு வசதி என்னவென்றால் தரவிறக்கும் முன்னரே வீடியோ பார்மேட் எப்படி வேண்டும் என Output Format இல் அமைத்துக் கொள்ள முடியும். மேலும் ஆடியோவின் வகையும் மாற்றிக் கொள்ளலாம். மேலும் அதிகப்படியான Output Settings இல் சென்று வீடியோவின் அளவு, பிட்ரேட் போன்ற அமைப்புகளையும் மேற்கொள்ளலாம்.
பல்வேறு இணையதளங்களிலிருந்து நமக்கு வேண்டிய வீடியோக்களைத் தரவிறக்கவும் கன்வர்ட் செய்யவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த மென்பொருள்.
தரவிறக்கச்சுட்டி:
[You must be registered and logged in to see this link.] நன்றி: வணக்கம்.