முள்ளங்கியில் சிவப்பு, வெள்ளை என இரண்டு வகைகள் உண்டு.
வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. சிவப்பு முள்ளங்கியை பொறுத்தவரை கிழங்கு, இலை மற்றும் விதை மூன்றுமே மருத்துவ குணமுள்ளவை.
வெள்ளை முள்ளங்கியில் ஒரு வித வாசனை வருவதற்கு கந்தகமும், பாஸ்பரமும் இருப்பதே காரணமாகும்.
பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் அளிக்கும்.
இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளி போன்ற பிரச்சினைகள் இருக்காது. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.
உடல் உஷ்ணத்தை தணிக்க வல்லது, இது வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளி நீக்க வல்லது. குடலில் புண் இருந்தாலும் ஆற்றி விடும், நீரிழிவு, நரம்பு தளர்ச்சிக்கு நல்லது.