கைப்பேசி உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி புரட்சிகளை செய்துவரும் Samsung நிறுவனமானது தற்போது ATIV S எனும் தொடரில் உருவாக்கப்பட்ட கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
4.8 அங்குல அளவுடையதும் 1280 x 720 Pixel Resolution கொண்டதுமான Super AMOLED தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட HD தொடுதிரையினைக்கொண்டுள்ளதுடன் 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெராவினையும், வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 1.9 மெகாபிக்சல்கள் உடைய துணைக்கமெரா ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளதுடன் 16GB சேமிப்புக்கொள்ளளவையும் கொண்டுள்ளது. இச்சேமிப்பு கொள்ளளவானது microSD Card மூலம் 32GB வரை அதிகரிக்க முடியும்.
இவை தவிர Bluetooth 3.0, microUSB, 1GB RAM, WiFi ஆகியனவும் காணப்படுகின்றன. இக்கைப்பேசிகளின் விலையானது 442 யூரோக்கள் ஆகும்.