கைப்பேசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாகவும், அதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாகவும் தொடர்ச்சியாக பல புதிய தொழில்நுட்படங்களுடன் கூடிய கைப்பேசிகள் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன.
இவற்றின் வரிசையில் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் Xiaomi MI-3 எனும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கைப்பேசிகள் அறிமுகமாகக் காத்திருக்கின்றன.
அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான NVIDIA Tegra 4 Chipset - களை கொண்டு உருவாக்கப்படும் இவை 4.5 அங்குல தொடுதிரையினை கொண்டதாகக் காணப்படுகின்றன.
மேலும் 1.8 GHz - 2 GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய quad-core Cortex-A15 CPU மற்றும் பிரதான நினைவகமாக 2.5 GB RAM ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளதுடன் 12 மெகாபிக்சல்கள் கொண்ட கமெராவும் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.