கைபேசி அழைப்பை தடுக்க புதிய கருவி அறிமுகம்
காரில் சென்று கொண்டிருக்கும் போது வரும் கைபேசி அழைப்புகளை தடுக்க புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைபேசி தொழில்நுட்பம் தகவல் பரிமாற்றத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அதே வேளையில் கார் உட்பட பல வாகனங்களை ஓட்டிச் செல்லுகையில் கைபேசியை பயன்படுத்துவதால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன.
கைபேசியால் ஏற்படும் விபத்துகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விபத்துகளை குறைப்பதற்காக ஸ்கோச் என்ற தொழில்நுட்ப நிறுவனம் செல் கன்ட்ரோல் என்ற நவீன கருவியை அறிமுகம் செய்துள்ளது.
கையில் எடுத்துச் செல்லும் அளவிற்கு சிறிய கருவியான இதை காரில் பொருத்தினால் பயணத்தின் போது கைபேசிக்கு அழைப்பு வந்தால் புளுடூத் சிக்னல் மூலம் அழைப்பு தடுக்கப்படும். மேலும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்ற சேவைகளையும் முற்றிலுமாக இக்கருவி தடுத்து விடும்.