உங்கள் குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு
குழந்தை பிறந்ததில் இருந்து எப்படி ஒரு குழந்தையின் அறிவை வளர்க்கலாம் என்று கற்றுத் தருகிறது ஒரு தளம்.
குழந்தையின் அறிவு வளர்ச்சியை எப்படி வளர்க்கலாம், படிப்பறிவு மட்டும் போதுமா?, எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் திறமை, ஞாபக சக்தி, முடிவு எடுக்கும் திறமை என அனைத்தையும் நாம் சிறுவயதில் இருந்தே வளர்க்கலாம். நம் குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று Free worksheets என்பதில் தொடங்கி ASSESSMENT மற்றும் EARLY CHILDHOOD என்பது வரை ஒரு குழந்தையின் சிந்தனை வளர்ச்சியை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்று துல்லியமாக சொல்லி கொடுக்கின்றனர்.
பலவித எளிய பயிற்சிகள் இத்தளத்தில் உள்ளது. நம் குழந்தைக்கு சரியான பயிற்சி எது என்று பார்த்து அதை சொல்லிக்கொடுத்தால் போதும், பேப்பரில் சாதாரணமாக ஒரு குழந்தை கிறுக்குவதில் தொடங்கி அட்டை மற்றும் பொம்மைகளை சரியாக சேர்ப்பது வரை அத்தனை பயிற்சியும் சொல்லி கொடுக்கிறது.
ஒரு குறிப்பிட்ட துறையில் நம் குழந்தை சிறப்பாக வரும் என்பதை நாம் இதன் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]