*Admin Admin
Posts : 875 Join date : 22/04/2011
| Subject: குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையதளம் Sat Jul 16, 2011 6:05 pm | |
| குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையதளம் | | வைஸ்ஸ் இணையதளத்தை குழந்தைகளுக்கானது என்றும் சொல்லலாம். பெற்றோர்களுக்குமானது என்றும் சொல்லலாம். சரியாக சொல்வதானால் குழந்தைகளுக்கு கற்றுத்தர பெற்றோர்களுக்கு கை கொடுக்கும் தளம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் தகவல்களை அவர்களுக்கு சொல்லித்தர உதவுவது தான் இந்த தளத்தின் நோக்கம். மிக அழகாக கேள்வி பதில் வடிவில் அடிப்படையான விடயங்களை குழந்தைகளுக்கு இந்த தளம் கற்று தருகிறது. விளையாடுவதற்காக பூங்கா அல்லது மைதானத்திற்கு அழைத்து செல்வது போல உலக விடயங்களை தெரிந்து கொள்வதற்காக இந்த தளத்திற்கு தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்லலாம். குழந்தைகளிடம் எப்போதுமே கேள்விகளுக்கு பஞ்சமில்லை. ஏன், எப்படி, எதற்காக என்ற கேள்விகளை குழந்தைகள் கேட்டு கொண்டே இருப்பார்கள். மரம் எப்படி வளர்கிறது? மீன் எவ்வாறு நீந்துகிறது? வானம் ஏன் நீளமாக இருக்கிறது? இருள் ஏன் வருகிறது? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளை சிறுவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் பிள்ளைகள் ஆர்வத்தோடு கேட்கும் இத்தகைய கேள்விகளுக்கு எத்தனை பெற்றோர்களால் பொருமையாகவும் சரியாகவும் பதில் சொல்லி விட முடியும். பல நேரங்களில் குழந்தைகள் கேட்கும் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி விடும் அனுபவம் எல்லா பெற்றோர்களுக்குமே உண்டு எனலாம். இது போன்ற நேரங்களில் பெற்றோர்கள் அசடு வழிவதுண்டு. வியந்து போவதுண்டு. கோபப்படுவது உண்டு. என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போவதும் உண்டு. உள்ளபடியே சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கேட்ட கேள்விக்கு சரியான் பதிலை தேடித்தர வேண்டும் என்று நினைப்பதுண்டு. இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது, சரியான பதில் தெரிந்து விட்டாலும் அதை சிக்கல் இல்லாமல் குழந்தைகளுக்கு புரியக்கூடிய வகையில் சொல்லத் தெரிய வேண்டும். இதை தான் வைஸ்ஸ் மிக அழகாக செய்கிறது. குழந்தைகள் மனதில் தோன்றக்கூடிய அல்லது அவர்களுக்கு சுவாரஸ்யம் தரக்கூடிய கேள்விகள் அவற்றுக்குறிய எளிமையான பதில்களோடு இடம் பெற்றுள்ளன. பூட்டுக்களை சாவி திறப்பது எப்படி? போன்ற கேள்விகள் தினந்தோறும் முகப்பு பக்கத்தில் இடம் பெறுகின்றன. இவற்றை தவிர கேள்விகள் தனித்தனி தலைப்புகளை கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கை, வரலாறு, அறிவியல், விலங்குகள், பருவ நிலை, சுற்றுச்சுழல் மற்றும் கலாச்சாரம் என பலவித தலைப்புகளில் கேள்விகளை காணலாம். இந்த தலைப்புகள் நாம் உண்ணும் உணவு, நடப்பு செய்திகள், அறிவியல் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கும் பெற்றொர்களுக்கும் எந்த பிரிவில் ஆர்வமோ அதில் கிளிக் செய்து பதில்களை தெரிந்து கொள்ளலாம். பதில்கள் மிக எளிமையான நடையில் இருப்பதோடு அந்த விடயம் தொடர்பாக மேலும் விவரங்கள தெரிந்து கொள்ளவும் வழி காட்டப்பட்டுள்ளது. கேள்வி பதில்கள் எல்லாமே அனுபவம் வாய்ந்த நிபுணர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் விரும்பினால் தங்கள் அனுபவத்தையும் இங்கு கேள்வி பதிலாக பகிர்ந்து கொள்ளலாம். பதில் வேண்டும் கேள்வியை குறிப்பிட்டு தேடும் தேடியந்திர வசதியும் இருக்கிறது. குழந்தைகளுக்கு உலக விடயங்களை கற்றுத்தரும் போதே அவர்களின் கற்பனை திறனையும் வளர்க்க வேண்டும் என்னும் குறிக்கோளை கொண்ட இந்த தளம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடையே உரையாடல் ஏற்படவும் வழி செய்கிறது. இணையத்தில் குழந்தைகளுக்கு நட்பான இணையதளங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். சொற்பமாக உள்ள இந்த பட்டியலில் வைஸ்ஸ் தளத்திற்கு முன்னுரிமை தரலாம். [You must be registered and logged in to see this link.] |
| |
|