ஒளிப்படங்களை ஆன்லைனில் எடிட் செய்ய உதவும் இணையதளம் Picnik புகைப்படங்களை அதிக அளவில் பயன்படுத்துவோருக்கு அதை எடிட் செய்வது, அளவைக் குறைப்பது, வெட்டுதல், எழுத்துகள் சேர்ப்பது போன்ற வேலைகள் செய்கிற மாதிரி இருக்கும். கணிணியில் அதற்கென போட்டோஷாப் போன்ற மென்பொருள்களை நிறுவி இந்த மாதிரி செய்வார்கள். இந்த மாதிரி மென்பொருள்கள் உங்கள் கணிணியில் இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்? சில நேரம் நண்பரின் வீட்டில் பயன்படுத்தும் போது அவரிடம் இதற்கென எந்த மென்பொருளும் இல்லை எனும் போது அவசரத்தில் என்ன செய்வது?
ஆன்லைனில் இதற்கென இருக்கும் இணையதளம் தான் Picnik எனும் தளமாகும். இத்தளம் ஆன்லைனில் ஒளிப்படங்களை எளிமையான முறையில் எடிட் செய்திட உதவுகிறது. இத்தளத்தின் சிறப்புகளை கீழே பார்ப்போம்.
1. சில நொடிகளில் தேவைப்படும் மாற்றத்தை செய்து விடமுடியும்.
2. மேம்பட்ட முறையில் ஒளிப்படங்களை எடிட் செய்ய கருவிகள் உள்ளன.
3. படங்களை வெட்டுவது (Crop), அளவைக்குறைப்பது(Resize), கோணங்களைச் சுற்றுவது (Rotating) போன்ற வேலைகளைச் செய்யலாம்.
4. மேலும் வேடிக்கையான படங்களைச்சேர்ப்பது போன்ற வடிவங்களையும் சிறப்பு எபெக்ட்களையும் சேர்க்கலாம்.
5. அழகான வித்தியாசமான எழுத்துருக்கள் நிறைய உள்ளன.
6. படங்களின் மேல் சொற்களை எளிதாக சேர்க்க முடியும். (Add Text)
7. இதன் சிறப்பான விசயம் என்னவென்றால் Picasa, Flikr, Facebook போன்ற இணையதளங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் நமது படங்களை சில வினாடிகளில் இதில் கொண்டு வந்து பயன்படுத்த முடியும் என்பதே.
இந்த பயன்பாட்டை உங்கள் கணிணியில் நிறுவத்தேவையில்லை. ஆன்லைனில் தேவைப்பட்ட போது பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இணையதள முகவரி :
[You must be registered and logged in to see this link.] நன்றி: வணக்கம்.