அவசர யுகத்தில் நமது மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்வது கூட ஒரு கடினமான வெளியாகி வருகிறது.திடீரென்று காலை ஏழு மணிக்கெல்லாம் பாஸ் அலுவலகத்துக்கு அவசர வேலையாக அழைக்கிறார்.
வேகமாக அங்கு கிளம்பிச் சென்ற பிறகு தான் தெரிகிறது.நமது மொபைலில் பேலன்ஸ் இல்லை என்பது.ஒன்பது மணிக்குதான் தெரு முனையில் இருக்கும் கடைக்காரன் திறப்பான்,ஆனால் அவசரமாக பேசியாக வேண்டும்,கையில் பணம்,கிரிடிட் கார்டு,டெபிட் கார்டு போன்ற இத்தியாதிகள் இருந்தும் நம்மால் உடனடியாக ரீ-சார்ஜ் செய்ய முடியவில்லை.
இதற்கு தீர்வாக அமைவது தான் இணையதளம் மூலம் நமது மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்து கொள்வது.இணைய உலகில் எதுவுமே சாத்தியமில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு வசதிகள் வந்து விட்டன.
அந்த வகையில் நமது மொபைலுக்கு ஆன்லைன் மூலமாக ரீ-சார்ஜ் செய்ய உதவும் மிகச்சிறந்த இணையதளங்களை இங்கே உங்களுக்காக பட்டியலிட்டுள்ளேன்.
+
[You must be registered and logged in to see this link.]ஹரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது இந்த இணையதளம். 24 மணி நேரமும் உடனடியாக நமது மொபைலுக்கு டெபிட்,அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏர்டெல், ஏர்செல்,வோடபோன்,பி,எஸ்,ஏன்,எல் உட்பட அனைத்து மொபைல் நிறுவன இணைப்புகளுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.மொபைல் மட்டுமல்லாமல் டாடாஸ்கை,டிஷ்டிவி,பிக்டிவி,வீடியோகான் உள்ளிட்ட டி.டி.ஹச்களுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மிகவும்,பாதுகாப்பான விரைவான சேவைகளை வழங்குவதால் இந்த இணையதளத்தை அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள்.பின்குறிப்பு : இங்கு உங்கள் நண்பர்களை அறிமுகப்படுத்தினால் இலவச ரீசார்ஜ் உட்பட பல பரிசு சலுகைகளும் உண்டாம்.
+
[You must be registered and logged in to see this link.]சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 2007 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் ரீசார்ஜ் நிறுவனம் இது. ஏர்செல், ஏர்டெல்,வோடபோன், ரிலையன்ஸ்,டாடாஇண்டிகாம்,பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட அனைத்து மொபைல் நிறுவன வழக்கமான டி.டி.எச் இணைப்புகளுக்கும் நாம் இங்கே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இணைப்புகளுக்கும் இதன் முகப்புப் பக்கம் இன்னும் மேம்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும்.
+
[You must be registered and logged in to see this link.]இதுவும் சென்னையை இடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் தான். ஏர்செல், ஏர்டெல், வோடபோன், உள்ளிட்ட பதினோரு மொபைல் நிறுவன இணைப்புகளுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.டி.டி.எச் சேவையில் தற்போதைக்கு டாடாஸ்கை ஆகியவற்றுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்,கூடுதல் வசதியாக இதன் முகப்புப் பக்கத்தின் பேருந்து பயணத்துக்கு டிக்கெட் பதிவு செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது.இதன் பக்க வடிவமைப்பும் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.
+
[You must be registered and logged in to see this link.]‘நூறு சதவீதம் திருப்தியான வாடிக்கையாளர்கள்’ என்ற முத்திரையுடன் இயங்கி வரும் இந்த இணையதளம் கிட்டத்தட்ட எல்லா மொபைல் ஆப்பரேட்டகளின் ரீசார்ஜ் சேவைகளையும்,எல்லா டி.டி.எச் நிறுவனங்களின் ரீசார்ஜ் சேவைகளையும் வழங்கி வருகிறது.விரைவில் விமான டிக்கெட் பதிவு செய்வது,,போஸ்ட்பெய்டு பில்களுக்கு பணம் செலுத்துவது,இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது போன்ற வசதிகளையும் தர இருக்கிறார்கள்.
+
[You must be registered and logged in to see this link.]இந்தியாவின் நம்பர் ஒன் ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் இணையதளம் என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வரும் இந்த இணையதளத்தில் ரீசார்ஜ் இலவசம்.ஆமாம்,இந்த இணையத்தளத்தில் நீங்கள் பத்து ரூபாய் முதல் எவ்வளவு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்கிறீர்களோ அந்த பணத்தின் மதிப்புக்கு கொஞ்சம் அதிகமாகவே பிஸ்ஸாஹட், குரோமா ரீடெயில்,ஷாப்பர்ஸ்ஷாப் போன்ற வணிக நிறுவனங்களின் தள்ளுபடி கூப்பனை தந்து விடுகிறார்கள்.
கூப்பன்கள் உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் முழுமையான தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.கூப்பன் வேண்டுமென்றால் அதற்கு டெலிவரி கட்டணமாக ஒரு கூப்பனுக்கு பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். முழுக்க முழுக்க மொபைல் போன்களுக்கு மட்டுமே இங்கே ரீசார்ஜ் செய்யலாம்.மிகவும் பாதுகாப்பான,விரைவான ரீசார்ஜ் சேவையை வழங்கும் இணையதளங்களில் இதுவும் ஒன்றாகும்.
+
[You must be registered and logged in to see this link.]குறைந்தது 25/- ரூபாய் முதல் இங்கே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். எஸ்.எம்.எஸ் மூலம் ரீசார்ஜ் செய்வது, போன் மூலம் ரீசார்ஜ் செய்வது போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளும் இங்கு உண்டு.
+
[You must be registered and logged in to see this link.]இதுவரை 63219 பேர்கள் பேஸ்புக் லைக் பட்டனில் சேர்ந்திருக்கிறார்கள். கேஷ்கார்டு,டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,மோப்பதுக்கும் மேற்பட்ட வங்கிகளின் நேரடி வங்கி டெபிட் கார்டு மூலமாகவும் இங்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.மிகவும் சிறப்பாக ரீசார்ஜ் செய்ய எளிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இணையதளம் இது.
+
[You must be registered and logged in to see this link.]freerecharge.in இணைய தளத்தைப் போலவே இந்த இணையதளத்திலும் நாம் ரீச்சார்ஜ் செய்கின்ற பணத்தின் மதிப்புக்கு ஆன்லைனில் பொருட்களை வாங்க,தியேட்டரில் படம் பார்க்க,பேருந்து டிக்கெட் பதிவு செய்ய போன்ற அத்தியாவசியமான தள்ளுபடி கூப்பன்களை தருகிறார்கள்.
ஆனால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மொபைல் நிறுவனங்களின் ரீசார்ஜ் சேவைகள் தான் உள்ளன. ஏர்டெல், வீடியோகான், யுநிநார் போன்றவை இல்லை.
+
[You must be registered and logged in to see this link.]தொலைதொடர்பு நிறுவனங்களில் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கி வரும் one97 Communications நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்த இணையதளத்துக்கு சென்னை தி.நகரில் கூட அலுவலகம் உண்டு.மொபைல்,டி.டி.எச் இரண்டு சேவைகளுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். வாரத்தின் ஏழு நாட்களிலும் ரீசார்ஜ் செய்வதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்படும் என்று சத்தியம் செய்கிறார்கள்.