*Admin Admin
Posts : 875 Join date : 22/04/2011
| Subject: தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம் Sun May 22, 2011 6:46 am | |
| [You must be registered and logged in to see this link.]தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம் இது, எளிதானது. உன்னதமானது. உயிர் காப்பது. இது உனது, உணர்வு. தீர்மானம். இரத்த்தானம் வழங்குவோம்! உயிர்களைக் காப்போம்!!
சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!!!மேலும் பார்க்க * இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும்.
* சாதாரண எடையுள்ள ஒவ்வொரு மனித உடம்பிலும் ஐந்து முதல் ஆறு லிட்டர் இரத்தம் இருக்கும். அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லி லிட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது எடுக்கப்படும்.
* தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும்.
* இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும்.
* இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
* உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும்.
* இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது.
* இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது.
* இரத்த தானம் செய்ய விரும்புவர்களுக்கு சர்க்கரை நோய், டிபி, எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது.
* இரத்த தானம் அளிக்க விரும்புபவருக்கு கடந்த 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.
ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம்.
அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும்.
இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்: வயது 17 முதல் 55 வரை. உடல் எடை 45 கிலோவுக்கு குறையாமல், எய்ட்ஸ், காமாலை, மலேரியா போன்ற வியாதிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்: உங்கள் இரத்தப் பிரிவு, உங்கள் இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு உங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கடி இரத்த தானம் செய்பவர்களுக்கு, இரத்தக் கொதிப்பு (Blood Pressure) நோய் வரும் வாய்ப்பு மிக குறைகிறது.
உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலஹீனமோ ஏற்பட வாய்ப்பே இல்லை.
மருத்துவம் [You must be registered and logged in to see this link.]</A> [You must be registered and logged in to see this link.] | |
|