கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கூகுள் மொபைல் மணிபர்ஸ்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Empty
PostSubject: கூகுள் மொபைல் மணிபர்ஸ்    கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Icon_minitimeMon Jun 13, 2011 5:17 pm

கூகுள் மொபைல் மணிபர்ஸ்

[You must be registered and logged in to see this link.] கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Google-wallet-logoசில்லறை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது.

இதன் மூலம்,கடைகளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதனம் ஒன்றின் முன், உங்கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கணக்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும்.

உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடைக்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக அந்தக் கடையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கூகுள் மொபைல் மணிபர்ஸ்  Mob_google-wallet

இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பத்தின் பெயர் NFC (Nearfield communication).

இதன் அடிப்படையில் இயங்கும் இரு சிப்களை, இரண்டு சாதனத்தில் அமைத்து அருகே வைத்து இயக்குகையில், அவை இரண்டும் தாங்களாகவே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்.

கிரெடிட் கார்ட் தகவல்கள், ட்ரெயின் டிக்கட், கூப்பன்களில் உள்ள பார் கோட் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதாக இவை கையாளும். இந்த சிப்களை இனி வெளியாகும் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களிலும் வைத்திட கூகுள் முடிவு செய்துள்ளது.

முதலில் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் நெக்சஸ் எஸ் மொபைலில் இது செயல்படும். முதல் முறையாக அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் நியூயார்க் நகரங்களில் இது சோதனை செய்யப்படுகிறது.

பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். பின்னர், அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படும்.

கூகுள் மொபைல் மணிபர்ஸ்  8596784.cmsஅமெரிக்காவில் பல வர்த்தக நிறுவனங்களும், கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கென கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன.

பன்னாட்டளவில் மூன்று லட்சம் வர்த்தக நிறுவனங்கள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வந்துள்ளதாகவும் கூகுள் அறிவித்துள்ளது.

சாம்சங், மோட்டாரோலா, எச்.டி.சி. நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் இதனை அறிமுகப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளன.

ஏற்கனவே இந்த தொழில் நுட்பத்தினை Microsoft, Visa, Sony, Nokia and AT&T ஆகிய நிறுவனங்கள் சப்போர்ட் செய்து வருகின்றன. என்.எப்.சி. தொழில் நுட்பம் இனி ஸ்மார்ட் போன்களில் ஒருங்கிணைந்த ஒரு வசதியாக கருதப்படும்.

இனி ட்ரெயின், பஸ் அல்லது விமானப் பயணங்களுக்கு, இன்டர்நெட் மூலம் டிக்கட் எடுத்து, அதனை அச்செடுத்து, மறந்துவிடாமல் எடுத்துச் செல்லும் வேலை எல்லாம் இருக்காது.

மொபைல் மூலமாகவே இன்டர்நெட்டில் டிக்கட் எடுத்து அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர், ஏறிச் செல்லும் வாகனங்களில் கதவுகளில் பதிந்து வைக்கப்பட்டுள்ள சாதனத்தின் முன், மொபைல் போனை ஆட்டிவிட்டு உள்ளே செல்லலாம்.



கடைகளில் பொருட்களை வாங்கிய பின்னர், மொபைல் போனை காசு வாங்கும் இயந்திரத்தின் முன் அசைத்துவிட்டு, ரசீது பெற்று பொருளை எடுத்துச் சென்றுவிடலாம்.

பணம் மட்டுமின்றி, வாகன ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை போன்றவற்றையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிடுகிறது.

இதில் மோசடி நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் இது இருந்தாலும், போன் இயக்கத்துடன் கலக்காமல் தனி சிஸ்டம் மற்றும் மெமரியில் என்.எப்.சி. சிப் இயங்கும்.

போன் இயக்கத்திற்கென ஒரு PIN எண்ணும், மொபைல் மணி பர்ஸுக்கென இன்னொரு PIN எண்ணும் பயன்படுத்த வேண்டும்.

கூகுளின் இந்த புதிய நிதி வர்த்தக நடவடிக்கை அதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் அவை இயங்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களை அதன் வளையத்திற்குள் கொண்டு வரும்.

வர்த்தகத்தில் ஈடுபடாமலேயே, பன்னாட்டளவில் பெரிய வர்த்தக நிறுவனமாக கூகுள் மாறும்.

இந்த துறையில் தங்களின் பங்கினையும் மேற்கொள்ள நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

அதிக எண்ணிக்கையில் நிறுவனங்கள் வந்தால், நமக்கு லாபம் தானே.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கூகுள் மொபைல் மணிபர்ஸ்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பேஸ்புக்கிற்குப் போட்டியாக கூகுளின் கூகுள்+ ஆரம்பம்
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
» கூகுள் டாக்ஸ் அவசியமா?
» கூகுள் குரோமிலேயே நட்சத்திரங்களை பார்வையிடுவதற்கு
» பழைய பிரவுசர்களை கைவிடும் கூகுள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: