பேஸ்புக்கிற்குப் போட்டியாக கூகுளின் கூகுள்+ ஆரம்பம் பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள், கூகுள்+ இனை ஆரம்பித்துவிட்டது. இந்தத் திட்டம் நீண்டநாட்களாக பல தடவைகள் ஆரம்பிக்கப்படவிருந்து இறுதியாக தற்போதுதான் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கூகுளின் மூத்த சமூகத்தள உதவித் தலைவர் குன்டோத்ரா அவர்களினால் இந்த நீண்டகாலத் திட்டம் வழிநடத்தப்பட்டு தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சமூகத்தளத் திட்டத்தின் தயாரிப்புகள் எங்கும் நிறைந்திருக்கும், navigation bar இன் முற்றிலுமான மீள் வடிவ அமைப்பிற்காக நன்றி கூற வேண்டும். ஒவ்வொரு கூகுள் பக்கங்களிலும் மேற்புறமிருந்த Gray strip கறுப்பாகும், மற்றும் கூகுள்+ ப்ரபைல் பலதரப்பட்ட புதிய தெரிவுகளுடன் வரும். பேஸ்புக்கில் notification சிவப்பு நிற எண்ணில் வருவதைப் போன்றே இதிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூகுள் + பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? கூகுள்+ என்பது சமூக வலைத்தளம். இது பேஸ்புக்கைப் போன்றே News feed, photo sharing வீடியோ மற்றும் links இணைப்பு போன்ற சகல வசதிகளையும் உள்ளடக்கியது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி பகிர்தல் மட்டுமல்ல பரதரப்பட்ட சமூகக் குழுக்களுடனும் நீங்கள் பகிர்வுகளை வைத்துக்கொள்ள முடியும்.
இதன் செயற்பாட்டை கூகுள் Circles என்ற அமைப்பு என குறிப்பிடுகிறது. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் நண்பர்கள் பட்டியல் விடயத்தில் வெற்றிகரமாக செயற்படவில்லை, காரணம் அவர்கள் “trck-on” தயாரிப்பினை பாவிக்கின்றனர் என குன்டோத்ரா விளக்கியுள்ளார்.
கூகுள்10
Circles ஆனது
HTML5 முறையின் ஊடாக பாவனையாளர்களது நண்பர்கள், குடும்பத்தினர், வகுப்புத் தோழர்கள், சக பணியாளர்கள் போன்ற வகைப்படுத்தலை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய வசதியை செய்துகொடுத்திருக்கிறது.
இதனுடைய விசித்திர தோற்றம் எம்மைக் கவர்கிறது. உதாரணமாக ஏதேனும் ஒரு
circle இனை நீங்கள் நீக்கம் செய்யும் போது ஒரு
animation (அசைவூட்டம்) தென்பட்டு ஸ்கிரீனிலிருந்து சுழன்று மறையும்.
புகைப்படங்கள் மற்றும் வீடியோ chatting மல்டிமீடியாவைப் பார்ப்பதற்கும், கையாள்வதற்கும் எடிட் செய்வதற்குமான பிரிவொன்றையும் கூகுள் உருவாக்கியிருக்கிறது. அத்தோடு மிக சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் இதில் படங்களை எடிட் செய்வதற்கான வசதியும் குழு வீடியோ chatting வசதியும் உள்ளது என்பது தான். மிக அதிக எண்ணிக்கையாக 10 பேர் கொண்ட குழு வீடியோ chatting வசதி உருவாக்கப்பட்டிருக்கிறது.
கூகுள்+ இற்கான மொபைல்
Apps இனையும் அன்ட்ராய்டுடன் தொடங்கி கூகுள் ஆரம்பிக்கவுள்ளது. இந்த
Android Apps இல்
Stream, Circles, Sparks மற்றும் மல்டிமீடியா வசதிகளும் உள்ளன. அத்தோடு
Mobile Apps வசதியிருப்பது வியப்பானது என்பதை விட மொபைலில் எடுக்கப்படும் புகைப்படங்கள் கூகுள்10 மூலமாக தானாக
upload செய்யப்பட்டு உங்கள் கணணியில் பகிர்தலுக்குத் தயாராக இருக்கும் என்பது தான் வியப்பானது.
நீங்கள் மறுபடியும் உங்கள்
desktop இனை
Open செய்யும் போது நீங்கள்
upload செய்வதற்கான விடயங்கள் எத்தனை உள்ளன என்பதை சுட்டிக்காட்டும்.
upload செய்த 8 மணித்தியாலங்கள் வரை இந்த சுட்டிக்காட்டல் தென்படும்.
எனவே தற்போது இரண்டு கம்பனிகளில் யார் சிறந்த பயன்பாடுகளைத் தமது பாவனையாளர்களுக்கு வழங்குவது என்ற போட்டியை ஆரம்பித்துள்ளன.
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]நன்றி: வணக்கம்.