இதய நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய தக்காளி மாத்திரைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதன் காரணமாக ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் இதய நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தக்காளி மாத்திரைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், தக்காளியின் மேற்பரப்பில் உள்ள லிகோபின் என்ற இரசாயன பொருளை கொண்டு, மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது.
இவைகள் தமனி ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை அகற்றி விரிவடைய செய்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மாத்திரையை தினமும் உட்கொண்டால், இதய நோய்களின் பாதிப்பின்றி வாழ முடியும் என்றும், நீரிழிவு மற்றும் புற்றுநோய் ஏற்படாமலும் தடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.