அமெரிக்காவில் ஒரேகான் மாநிலத்தில் பென்ட் என்ற இடத்துக்கு 30 கி.மீட்டர் தொலைவில் நிïபெர்ரி என்ற எரிமலை தற்போது நெருப்பை கக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதில் 2 கோடியே 40 லட்சம் காலன் தண்ணீரை ஊற்றி மின்சாரம் தயாரிக்க நிபுணர்கள் முயற்சி செய்ய இருக்கிறார்கள். இதற்காக மலையில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு வருகின்றன.
அதில் கிடைக்கும் தண்ணீரை எரிமலை மீது ஊற்ற நீராவி வெளியாகும். அதிவேகமாக வெளியாகும் சுடுதண்ணீர், நீராவியிலிருந்து மலிவான, சுத்தமான மின்சாரம் தயாரிக்க முடியும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
ஆனால் ஜியோதெர்மல்’ என்று அழைக்கப்படும் இந்த மின்சாரம் தயாரிக்கும் முயற்சியின்போது தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற அச்சமும் எழுந்துள்ளது. எந்த குறைபாடும் இல்லாமல் வெற்றிகரமாக மின்சாரம் தயாரிப்பது குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் -
நன்றி-முகநூல்