*Admin Admin
Posts : 875 Join date : 22/04/2011
| Subject: ஆசிய கால்பந்து: சாதிக்குமா இந்தியா Sat May 21, 2011 1:38 pm | |
| ஆசிய கால்பந்து: சாதிக்குமா இந்தியா [You must be registered and logged in to see this image.]தோகா: ஆசிய கால்பந்து தொடர், கத்தாரில் இன்று ஆரம்பமாகிறது. இதில் பாய்ச்சங் பூட்டியா தலைமையிலான இந்திய அணி சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்தார் தலைநகர் தோகாவில், 15வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. 27 ஆண்டுகள்: ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இந்திய அணி, மூன்றாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. முன்னதாக கடந்த 1964, 84ம் ஆண்டுகளில் இத்தொடரில் விளையாடியது. இதன்மூலம் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. கடந்த 1964ல் இஸ்ரேலில் நடந்த இத்தொடரின் பைனலில், இந்திய அணி, இஸ்ரேல் அணியிடம் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது. கடந்த 1984ல் சிங்கப்பூரில் நடந்த இத்தொடரின் முதல் சுற்றோடு இந்திய அணி வெளியேறியது. சவுதி ஆதிக்கம்:இதுவரை நடந்துள்ள 14 தொடரில் சவுதி அரேபியா, ஈரான், ஜப்பான் அணிகள் தலா மூன்று முறை கோப்பை வென்றுள்ளன. தென் கொரிய அணி 2, இஸ்ரேல், குவைத், ஈராக் அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றுள்ளன. இந்தியா-ஆஸி., மோதல்:இன்று நடக்கும் தொடரின் முதல் போட்டியில் "ஏ' பிரிவில் உள்ள கத்தார், உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வரும் 10ம் தேதி சந்திக்கிறது. அதன்பின் பக்ரைன் (14ம் தேதி), தென் கொரியா (18ம் தேதி) அணிகளுடன் மோதுகிறது. இந்திய வாய்ப்பு: இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய அணி கடுமையாக போராட வேண்டும். ஏனெனில் தற்போது "பிபா' ரேங்கிங்கில் 142வது இடத்தில் உள்ள இந்திய அணி, சமீபத்தில் நடந்த நட்பு ரீதியிலான பயிற்சி போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக், குவைத் உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்தது. இருப்பினும் கடந்த ஒரு மாதமாக துபாயில் பயிற்சி மேற்கொண்ட இந்திய அணி, இத்தொடரில் சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காயத்திலிருந்து மீண்டுள்ள கேப்டன் பாய்ச்சங் பூட்டியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க அதிக வாய்ப்பு இருப்பதால், இந்திய அணி தொடரை வெற்றியுடன் துவக்கலாம். கத்தாரில் பூட்டியா ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க பாய்ச்சங் பூட்டியா தலைமையிலான இந்திய அணி நேற்று கத்தார் வந்தடைந்தது. இன்று காலை முதல், இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வரும் 10ம் தேதி சந்திக்கிறது | |
|