Subject: புதிய வசதிகளுடன் கூடிய கூகுள் குரோம் 11 அறிமுகம் Sat May 21, 2011 1:18 pm
புதிய வசதிகளுடன் கூடிய கூகுள் குரோம் 11 அறிமுகம்
இணைய பிரவுசர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாசகர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி கொண்டுள்ளனர். தற்போது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் IE 9 என்ற புதிய பதிப்பை வெளியிட்டது.
கூகுள் நிறுவனம் பல்வேறு வசதிகளை கொண்ட புதிய பதிப்பான Google Chrome 11 என்பதை வெளியிட்டுள்ளது. எந்த உலவியிலும் இல்லாத சிறப்பம்சமே கூகுள் குரோமில் உள்ளது.
அதாவது கூகுள் குரோம் பிரவுசர் புதிய பதிப்பை வெளியிட்டவுடன் குரோம் உலவியை பயன்படுத்துபவரின் அனைவருக்கும் இந்த உலவி தானாகவே அப்டேட் ஆகிவிடும்.
உங்களுடைய பிரவுசர் அப்டேட் ஆகிவிட்டதா என அறிய வேண்டுமென்றால் Settings - About Google Chrome க்ளிக் செய்து உங்களுக்கு வரும் விண்டோவில் கூகுள் குரோம் பதிப்பை பார்க்கவும்.
மேலே குறிப்பிட்டது போன்று இருந்தால் உங்கள் உலவி அப்டேட் ஆகிவிட்டது. இது போல இல்லாமல் அப்டேட் ஆகவில்லை என்றாலும் உலவி தானாகவே அப்டேட் ஆக தொடங்கும்.
இந்த இரண்டு முறைகளிலும் அப்டேட் ஆகவில்லை என்றால் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள்.