1. சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன.
2. எக்ஸெல் தொகுப்பில் தகவல்களை பேஸ்ட் செய்திட கண்ட்ரோல்+வி(Ctrl+V) அல்லது பேஸ்ட்(Past) பட்டனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒரு செல்லில் உள்ள தகவல்களை கண்ட்ரோல்+சி(Ctrl+V) கொடுத்து காப்பி(Copy) செய்திடுங்கள். பின் எந்த செல்லில் அவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். ஆஹா! பேஸ்ட் ஆகிவிட்டதா உங்கள் தகவல்கள்.
3. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளின்டன் எத்தனை இமெயில்களை ஒரு ஜனாதி பதியாக அனுப்பி இருப்பார். ஆயிரம்? லட்சம்? இல்லவே இல்லை. ஜஸ்ட் இரண்டு தான். ஒன்று ஜான் கிளென் என்பவருக்கு – அவர் ஸ்பேஸ் ஷட்டில் விமானத்தில் இருக்கையில். இன்னொன்று தனக்கான இமெயில் சரியாகச் செயல்படுகிறதா என்று பார்க்க ஒரு டெஸ்ட் இமெயில்.
4.ரேடியோ அலைகள் ஒலி அலைகளைக் காட்டிலும் மிக மிக வேகமாக பயணிக் கின்றன. ஒரு அறையில் பேசப்படும் ஒலி அந்த அறையின் பின் சுவர்களை அடையும் முன் அந்த ஒலியை ரேடியோ மூலம் ஒலி பரப்பினால் அந்த நேரத்தில் 18 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கும்.
5. டைப்ரைட்டர் கீ போர்டை குவெர்ட்டி (QWERTY) கீ போர்டு என அழைக்கிறோம். இது கீகளின் வரிசையில் எழுத்துக்களுக்கான வற்றில் முதல் வரிசையில் முதல் ஆறு கீகளை இணைத்த சொல்லாகும்.இதை தயாரித்தவரின் பெயர் தான் QWERTY.இன்னொரு விஷ யம் என்னவென்றால் Typewriter என்ற சொல்லை முதல் வரிசையில் உள்ள கீகளைக் கொண்டே அமைக்கலாம் என்பதே.
6. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் தொகுப்பில் சேவ் என்ற செயல்பாட் டிற்கான ஐகான் இன்னும் பிளாப்பி டிஸ்க்காகவே உள்ளது. அதிலும் அதன் ஷட்டர் பின்புறமாக இழுக்கப்பட்ட நிலையில் உள்ளது.
7. இன்று இணையத்திற்கான ஏகப்பட்ட சர்ச் இஞ்சின்கள் உள்ளன. முதல் முதலில் உருவாக்கப்பட்ட சர்ச் இஞ்சின் குறித்துப் பார்ப்-போமா!Archie என்ற பெயரில் முதல் சர்ச் இஞ்சின் உருவானது. இதனை Alan Emtage என்பவர் தயாரித்தார். இவர் McGill என்ற பல்கலைக் கழகத்தில் அப்போது மாணவராக இருந்தார். இது 1990ல் உருவானது.
8. உலகின் சிறிய ஹார்ட் டிஸ்க்கை உருவாக்கிய பெருமை தோஷிபா நிறுவனத்தைச் சேரும். 0.85 அங்குல அளவில் இந்த ஹார்ட் டிஸ்க் தயாரிக்கப்பட்டது. ஒரு அங்குலத்திற்கும் குறைவான அளவிலான டிஸ்க்கில் பல கிகாபைட் அளவிலான தகவல்களைக் கொண்டிருந்ததும் இந்த டிஸ்க்கே.
9. இன்டர்நெட்டில் உலா வருபவர்கள் விக்கி பீடியாவை (Wikipedia) பயன்படுத்தாமல் இருக்க மாட்டீர்கள். அனைத்திற்கும் அதன் ஆதி அந்தம் முதல் தகவல்களைத் தரும் இணைய களஞ்சியமாகும்.
நீங்களும் உங்களிடம் உள்ள தகவல்களை இதில் இடலாம் என்பது இதன் சிறப்பு. இந்த Wikipedia என்ற சொல் ஏன் இதற்கு வைக்கப்பட்டது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா! ஹவாய் மொழியில் "Wiki" என்றால் விரைவில் என்று பொருள். அதோடு என்சைக்ளோபீடியாவின் பின் பகுதி சேர்க்கப்பட்டு இந்த சொல் உருவாக்கப்பட்டதாம்.
10. பல வீடுகளில் மைக்ரோ ஓவன் அடுப்பு உள்ளது. இது பயன்படுத்தும் மின்சாரம் 600 வாட் முதல் 1100 வாட் வரை ஆகும். சரி, உங்கள் மொபைல் போன் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறது என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? ஜஸ்ட் 0.6 வாட் தான்.
11. இமெயிலில்
@ என்ற எழுத்து பயன்படுத்தப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது. இது
at என்ற ஆங்கில சொல்லின் சுருக்கம் ஆகும். இந்த இடத்தில் என்பதனை இது பொருளாகக் கொண்-டுள்ளது. இந்த முகவரியில் உள்ள சர்வரில் இவருக்கு இன் பாக்ஸ் உள்ளது என்பதே ஒரு இமெயில் முகவரியாகும்.