Microsoft கணினி நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட KIN தொலைபேசி உரிய இலாபம் ஈட்டததால், இதன் உற்பத்தியையும், விற்பனையையும் நிறுத்தப் போவதாக 01/07/2010 அன்று அறிவித்துள்ளது. Kin கையடக்கத் தொலைபேசி இந்த வருட இறுதியில் ஐரோப்பிய கண்டத்தில் வெளிவருவதாக இருந்தது. ஆனாலும் Microsoft நிறுவனத்தின் இந்த புதிய முடிவால் ஐரோப்பிய Windows ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தவிர வேறொன்றும் இல்லை. இந்த ஏமாற்றத்தை ஈடு செய்வதற்கு இதன் புதிய பரிமாணமான Windows 7 தொலைபேசி உற்பத்தியை Microsoft தொடங்கவுள்ளது.
Microsoft நிறுவனம் CNet செய்தி சேவைக்கு வழங்கிய அறிக்கையில், தாம் தமது புதிய பரிமாணமான windows 7 கையடக்கத் தொலைபேசியில் முழு கவனத்தையும் செலுத்தப்போவதாகவும் மேலும் Kin கையடக்கத் தொலைபேசியை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவிருந்த சிந்தனையை கைவிடுவதாகவும் தெரிவித்தது. இது தொடர்ந்து வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டதாவது KIN கையடக்கத் தொலைபேசி குழு எதிர்காலத்தில் Windows 7 குழுவுடன் தொடர்ந்தும் பணிபுரியப் போவதகவும், மேலும் அவர்களின் விலை மதிப்பற்ற சிந்தனைகளையும், தொழில்நுட்ப ஆற்றல்களையும் Windows 7 கையடக்கத் தொலைபேசியில் இணைக்கப்போவதாகவும் தெரிவித்தது. Kin கையடக்க தொலைபேசி அதிக விளம்பரங்களை கொண்ட ஒரு சாதனமாக அமெரிக்க நாட்டில் விளங்கியது. ஆனாலும் அந்த நாட்டில் நிலவிவரும் இயங்குதளங்களுக்கு இடையிலான போட்டியின் காரணமாக (iSO4, Android) முகங்கொடுக்க முடியாமல் இந்த KIN கையடக்க தொலைபேசி தோல்வியைத் தழுவியுள்ளது.
Kin கைடயக்கத் தொலைபேசியானது, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்காவின் Verizon தொலைதொடர்பு நிறுவனத்தின் ஊடாகவும், ஐக்கிய இராட்சியத்தில் இந்த வருட மூன்றாவது பருவகாலத்தில் ” இலையுதிர்காலம்” Verizon தொலைதொடர்பு நிறுவனத்தின் இணை நிறுவனமான Vodafone நிறுவனம் ஊடாகவும் விற்பனை செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது இத்திட்டத்தின் நிலைமை மாறியுள்ளது. எப்படியாயினும் Kin கையடக்கத் தொலைபேசி ஒருபோதும் Microsoft நிறுவனத்தின் கையடக்க தொலைபேசி செயல்திட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவர்களின் செயல்திட்டம் குறிப்பாக Windows தொலைபேசிக்கே முக்கியத்துவமாக இருந்தது. இந்த காரணமே KIN தொலைபேசி வீழ்சிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று, இது தவிர Michael Gartenberg, ஒரு தொலைபேசி பாவனையாளர் ஆய்வாளர், கூறுகையில் Verizon தொலைதொடர்பு நிறுவனத்தின் விலை திட்டமும் இதன் விற்பனை வீழ்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும் எனக் கூறினார்.
எவ்வாறெனினும் KIN தொலைபேசி விற்பனை இடைநிறுத்தம் சந்தை பங்கு வீழ்சி திண்டாட்டத்தை கொடுக்குமே தவிர வேறு ஒன்றும் இல்லை. ஏனென்றால் Smart phone சந்தையானது பெரும் போட்டியை எதிர் நோக்கும் இந்த வேளையில், தமது சந்தை பங்குகளை சந்தையின் ஜாம்பவான்களான Apple iPhone, Android இயங்குதள தொலைதொடர்பு நிருவனங்களான Samsung, Sony Ericsson, Nokia மற்றும் Blackberry போன்றவர்களிடம் இழந்துவிடக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக தென்படுவதால்தான்.
எது எப்படியாயினும் பொறுத்திருந்து பாப்போம் என்ன மாற்றங்களை Windows 7 கையடக்க தொலைபேசி கொண்டு வரப் போகின்றதென்பதை.