விதவிதமான வீடியோ ஸ்கிறீன்சேவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நாமே ஸ்கிறீன்சேவரை உருவாக்கினால் எப்படி இருக்கும்.
நமக்கு விருப்பமான படங்கள், திரைப்பட பாடல்கள் என நமது கணணி ஓய்வாக இருக்கும் சமயங்களில் வீடியோவாக ஒலித்தால் அருமையாக இருக்கும் அல்லவா?
அதற்கு இந்த சின்ன மென்பொருள் நமக்கு உதவி புரிகின்றது. இந்த மென்பொருளில் பதிவிடும் வீடியோவை நாம் முதலி்ல் .swf கோப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு உங்களிடம் Format Factory என்கின்ற மென்பொருள் இருக்க வேண்டும்.
இப்பொழுது உங்களிடம் உள்ள வீடியோ கோப்பை இந்த மென்பொருள் மூலம் .SWF கோப்பாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது WG SCREEN SAVER CREATER என்கின்ற மென்பொருள் தேவை. 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
இதில் Add Files மூலம் தேவையான வீடியோ கோப்பை தேர்வு செய்யுங்கள். வீடியோ ஸ்கிரீனை தேவையான அளவிற்கு செட் செய்யுங்கள். உங்களது வீடியோ அளவானது ஸ்கிரீனைவிட குறைந்த அளவாக இருந்தால் வேண்டிய நிறத்தினை பின்புலத்தில் கொடுத்துக் கொள்ளலாம்.
இனி அதில் உள்ள Creator கிளிக் செய்யவும். சில நிமிடங்களில் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இந்த ஸ்கிறீன்சேவருக்கு உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம். இப்போது டெக்ஸ்டொப்பிற்கு வந்து காலி இடத்தில் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள்.
டிஸ்பிளே ப்ராபர்டிஸ் தேர்வு செய்து அதில் ஸ்கிறீன்சேவர் டேபினை கிளிக் செய்யுங்கள். வரும் விண்டோவில் நீங்கள் கொடுத்த பெயரினை தேர்வு செய்து அப்ளை-ஓ.கே.கொடுங்கள்.
அவ்வளவுதான் நீங்கள் விரும்பிய பாடல் ஸ்கிறீன்சேவராக ஓட ஆரம்பிக்கும். இதனுடைய மூல கோப்பை நீங்கள் விரும்பிய நபருக்கும் கொடுக்கலாம்
download link
[You must be registered and logged in to see this link.]