பத்தாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை தாங்கி பிடித்து பெண் சாகசம் பத்தாவது மாடியிலிருந்த விழுந்த இரண்டு வயதுக் குழந்தையை தாவிப் பிடித்து 31 வயதுப் பெண்மணி சாதனை படைத்துள்ளார்.
தனது உயிரைப் பணயம் வைத்து சிறு குழந்தையின் உயிரைக் காப்பாற் றியுள்ளார். சீனாவின் கிழக்கு மாணானத்தில் உள்ள ஹாங்லு என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சாதாரணமாக அப்பெண் வீதியால் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அடுக்கு மாடித் தொடர் ஒன்றின் பத்தாவது மாடியிலிருந்து குழந்தை ஒன்று கீழே விழுவதை பார்த்துள்ளார். தனது காலில் இருந்த பாதணியை கழற்றி எறிந்த விட்டு ஓடிச் சென்று குழந்தையை இரு கரங்களாலும் தாங்கிப் பிடித்துள்ளார்.
குழந்தை கையில் இருந்து நழுவி புற்தரையில் விழுந்தது. பலத்த காயங்களுக்கு உட்பட்ட குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறது. கையில் தாங்கிப் பிடித்த காரணத்தினால் அப்பெண்ணின் இடதுகை முறிவடைந்துள்ளது.
கையில் விழுந்த குழந்தை பெண்ணின் தலையில் அல்லது இடுப்பில் விழுந்தால் அவர் பக்கவாதத்திற்கு உள்ளாகி இருப்பார் என பரிசோதித்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.