கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Empty
PostSubject: ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள்   ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Icon_minitimeFri Jul 01, 2011 3:34 pm

ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள்

ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Q2751538-140x140


இந்த பூமிப் பந்தில் எண்ணில் அடங்காத ரம்யமான விடயங்கள் காணப்படுகின்றன. அதேபோன்று தீமைகளும் எண்ணிடலங்காதவை. இதன் அடிப்படையில் மனித வர்க்கத்திற்கும், ஏனைய இயற்கைத் தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்கும் ஆபத்தைக் ஏற்படுத்தக் கூடிய உயிரினங்கள் பற்றிய தகவல்கள் கீழே விபரிக்கப்பட்டுள்ளன.
ஏசியன் கார்ப் மீன்

ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Fish


ஏசியன் கார்ப் மீன் வகைகள் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். ஒரு மீற்றர் வரையில் நீளமான இந்த மீன் இனங்கள் 45 கிலோ கிராம் வரையில் எடையுடையது. இந்த வகை மீன்கள் சீனாவில் அதிகளவில் காணப்படுகின்றன. ஏசியன் கார்ப் மீன் வகைகள் இயற்கை சமனிலைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய சொற்ப விலங்கினங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

இவை உணவுச் சங்கிலியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாளில் இந்த மீன் வகைகள் தனது உடலின் அரைவாசி எடையுடைய உணவுகளை உட்கொள்கின்றன. ஏசியன் கார்ப் மீன் குடும்பத்தைச் சேர்ந்த சில்வர் கார்ப் மீன் வகைகள் மிகவும் ஆபத்தானவை.

சில்வர் கார்ப் மீன்கள், மீனவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தக் கூடியவை. நீர்ப்பரப்பிலிருந்து மேலே குதித்து மீனவர்களின் கண்கள், எலும்புகள் உள்ளிட்ட உடல் பாகங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தக் கூடியவை.

எமரல்ட் அஸ் போரர் பூச்சிகள்

எமரல் ஆஸ் போரர் பூச்சிகளும் மிகவும் ஆபத்தான உயிர் அங்கிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இந்த வகைப் பூச்சிகள் பாரிய தவாரங்களை குறுகிய நேரத்தில் நாசம் செய்து விடுகின்றன. மரங்களில் துளைகளை ஏற்படுத்தி சேதப்படுத்துகின்றன. 2002ம் ஆண்டு முதல் முதலில் அமெரிக்காவில் இந்த பூச்சி வகை கண்டு பிடிக்கப்பட்டது. இந்த பூச்சிகள் சீனாவை பூர்வீகமாகக் கொண்டவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெற்றிலையிலிருந்து இந்தப் பூச்சிகள் உருவாகின்றன. இந்த பூச்சிகளின் தாக்கத்தினால் பல மில்லியன் கணக்கான மரங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றினை அழிப்பதற்கு குளவிகளை பயன்படுத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. பூச்சிகள் செறிந்து வாழும் பிரசேதங்களில் 150,000 குளவிகள் பரவவிடப்பட்டு அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
பன்டாக்கள்

ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Q2751538பன்டாக்களை நாம் எமது செல்லப் பிராணிகளாகவே கற்பனை செய்கின்றோம். மிகவும் ஆகர்சமான விலங்கினமாகவே நாம் பான்டாக்களை பார்த்து பழகியுகியுள்ளோம். எனினும் பன்டாக்கள் ஆபத்தானவை.

சார்ள்ஸ் டாவினின் கூர்ப்பு கொள்கைகளுக்கு புறம்பான வகையில் வாழும் ஓர் உயிரினமாகவே பன்டாக்கள் நோக்கப்படுகின்றன. பன்டாக்கள் வாழ்வதற்கோ அல்லது இனத்தை விருத்தி செய்வதற்கோ நாட்டம் காட்டாத விலங்கினங்களாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது.

எனவே பன்டா உயிரினங்களை பாதுகாப்பதற்கு விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொள்கின்றனர். மனிதரின் முட்டாள் தனத்தை பன்டாக்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. பன்டாக்கள் உயிர் பல்வகைமை பேணலுக்கு முரணான விலங்கினங்களில் ஒன்றாகும்.
நாடாப்புழு

ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் 220px-Hookworms


நாடர் புழு என்பது மனிதனின் குடலில் உருவாகும் புழு வகையாகும். இந்தப்புழு மிகவும் ஆபத்தான மற்றுமொரு அங்கியாகும். இவை மனிதனை தொடர்ச்சியாக பசியடைச் செய்கின்றது. எவ்வளவு உணவு உட்கொண்டாலும் பசி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்தப் புழுக்கள் ஒரு மில்லி மீற்றர் முதல் 15 மீற்றர் வரையில் நீளமாக இருக்கக் கூடும். மனிதரில் மட்டுமன்றி ஏனைய உயிரினங்களையும் இந்த நாடாப் புழுக்கள் தாக்கக்கூடும்.

மலம் கழிக்கும் போது இந்தப் புழுக்கள் வெளியாகும் வரையில் சில இந்த நோய்க்கான அறிகுறியை உணர மாட்டார்கள். மருந்து மாத்திரைகளின் மூலம் இந்த நோயைக் குணப்படுத்த முடியும்.
வெட்டுக்கிளி

ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Jan4jpg1


பெரிய வெட்டுக்கிகள் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இவை குறுகிய காலத்தில் பாரியளவில் இனவிருத்தி செய்யக்கூடியவை. பல நூறு மைல்கள் பயணிக்கக் கூடிய இவை, பயிர்ச்செய்கை நாசப்படுத்தக் கூடியன.

வெட்டுக்கிளி தொல்லையிலிருந்து மீள்வது இன்னமும் நெருக்கடியாகவே காணப்படுகின்றது. வெட்டுக்கிளிகளை உணவாக உட்கொள்ளவும் முடியும்.
செட்சி வகை ஈ

ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் Fly_drink2crop800 செட்சிவ வகை ஈக்கள் ஆபத்தானவை. இந்த வகை ஈக்கள் உலகின் சகல கண்டங்களிலும் காணப்படுகின்றன. மனிதர்களின் உறக்கம் தொடர்பான நோய்களை இந்த ஈக்கள் ஏற்படுத்துகின்றன.

ஆபிரிக்க கண்டத்தில் இந்த வகை ஈக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. காய்ச்சல், தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களை இந்த வகை ஈக்கள் ஏற்படுத்துகின்றன. உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிராபத்தை ஏற்படுத்தும்.
எலிகள்

ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் 070a692a-5a9e-46f7-9c3c-435967525970_S_secvpf.gif


14ம் நூற்றாண்டில் எலிகளினால் ஏற்பட்ட கொள்ளை நோய் பேரழிவை ஏற்படுத்தியிருந்தது. 1347 – 13451ம் ஆண்டு வரையில் கொள்ளை நோய் உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஐரோப்பாவின் மூன்றில் இரண்டு சனத்தொகை கொள்ளை நோயினால் அழிவடைந்ததாக புள்ளி விபரத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 200 ஆண்டுகளில் சுமா ஓரு மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் கொல்லப்பட்டனர்.
மனிதர்கள்

குரோதம், காழ்ப்புணர்ச்சி, பொறாமை போன்ற குணங்களை கொண்ட மனிதர்கள் யுத்தக் குற்றச் செயல்கள், அணுவாயுத பயன்பாடு, தீவிரவாதம், ஜாதிச் சண்டை, மதச் சண்டை என பல்வேறு வழிகளில் சொந்த இனத்தை கொன்று குவித்து வருகின்றனர். ஹோமோ சேப்பியன் மனிதர்கள் இந்த உலகிற்கு பேராபத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

கொலைகள் பாலியல் பலாத்காரம் சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களினால் உலகத்தை கொலைக்கமாக மனிதர்கள் மாற்றியுள்ளனர். மனிதன் தனது இனத்துக்கு மட்டுமன்றி இயற்;கைக்கும் ஏனயை விலங்கினங்களுக்கும்; அழிவைத் தேடி தருகின்றான்.
மூட்டைப் பூச்சி

ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள் 250px-Cimex_lectularius
மூட்டைப் பூச்சிகளினால் உயிராபத்து கிடையாது என்ற போதிலும் இவை மிகவும் ஆபத்தானவை. மூட்டைப் பூச்சிகள் கடிப்பதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

மூட்டைப் பூச்சிகள் விரைவில் பரவுவதனால் பெரும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. சிறிய பூச்சிகள் என்ற போதிலும் மனிதனின் இரத்தத்தை உரிஞ்சிக் குடிக்கும் திறன் கொண்டவை.

நன்றி: வணக்கம்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்
» குளிர்ச்சியான பானம் ஏற்படுத்தும் பாதிப்புகள்
» கண்களுக்கு வலியை ஏற்படுத்தும் செயல்கள்
» மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் சூரிய ஒளி
» அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: