வயது முதிர்ந்தவர்கள் அதிகளவு மதுபானத்தை அருந்தக் கூடாது வயது முதிர்ந்தவர்கள் அதிகளவு மதுபானத்தை அருந்தக் கூடாது என மருத்துவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒன்று தசம் ஐந்து புள்ளி அளவு அல்ககோலையே நாள் ஒன்றுக்கு அருந்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அரை கிளாஸ் பியர் அல்லது ஒரு கிளாஸ் சிறிய வைன் அளவையே வயது முதிர்ந்தவர்கள் அருந்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வயது முதிர்ந்தவர்களின் உடலில் மதுபானம் உரிய முறையில் செயற்படாது எனவும், ஏனைய நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்துப்பொருட்களை மதுபானம் செயலிழக்கச் செய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனிமை, அழுத்தம், ஓய்வு போன்ற பல்வேறு காரணிகளுக்காக வயது முதிர்ந்தவர்கள் அதிகளவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இளம் தலைமுறையினரைப் போன்று அல்லது அநேகமான வயது முதிர்ந்தவர்கள் வீடுகளிலேயே மதுபானம் அருந்துவதனால் சரியான புள்ளி விபரங்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதிகமானவர்கள் நோய்களினால் பாதிக்கப்படுவதற்கு மதுபாவனை பிரதான ஏதுவாக அமைகின்றது.
மருந்துப் பொருட்கள் உரிய முறையில் உடலில் தாக்கமுறுவதனை மதுபாவனை தடுப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.