விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டங்கள் வந்த பின்னரும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.
பாரஸ்டர் என்னும் ஆய்வு நிறுவனம் சென்ற மார்ச் வரையிலான காலத்தில் எந்த ஓபரேட்டிங் சிஸ்டங்கள் பயன்பாட்டில் உள்ளன என்று ஒரு கணிப்பினை மேற்கொண்டு அண்மையில் முடிவுகளை வெளியிட்டது.
2,500 நிறுவனங்களில் 4 லட்சம் வாடிக்கையாளர்களைச் சந்தித்து தகவல்களைத் திரட்டியது. பன்னிரண்டு மாதங்கள் இந்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
முடிவுகள் பின் வருமாறு: புதிய கணணிகளில் விண்டோஸ் 7 பதிந்து பயன்படுத்துவது 83%ஆக உள்ளது. விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்திற்குச் செல்பவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து விட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இது பாதியாகக் குறைந்து வருகிறது. ஆனால் டெஸ்க்டொப் கணணிகளில் 60% கணணி பயன்பாட்டில் இருப்பது விண்டோஸ் எக்ஸ்பி மட்டுமே என தெரியவந்துள்ளது.