சுவிட்ஸர்லாந்து மிருகக் காட்சிசாலையில் பனிச் சிறுத்தைகள் (பட இணைப்பு) [You must be registered and logged in to see this image.]இவை பனிப் பிரதேசத்தில் வாழும் சிறுத்தைகள். பனிச் சிறுத்தை என்றும் அழைப்பதுண்டு.
சுவிட்ஸர்லாந்தில் உள்ள பேஸல் மிருகக் காட்சிசாலையில் எட்டு வாரங்களுக்கு முன் ஒரே பிரசவத்தில் இந்த மூன்று பனிச் சிறுத்தைகளும் பிறந்தன.
இவை தற்போது மக்களின் பார்வைக்காக அவற்றின் தாய் மற்றும் தகப்பனோடு சேர்த்து அங்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குட்டிகளுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆனால் தாயின் பெயர் மேஹன், தந்தையின் பெயர் பேடர்.
2009ஆம் ஆண்டு முதல் இவை இரண்டும் ஜோடியாக இந்த மிருகக் காட்சிசாலையில் வசித்து வருகின்றன.
ஐரோப்பாவில் சிறுத்தை இனத்தைப் பெருக்கச் செய்யும் ஒரு வேலைத் திட்டத்தின் மூலமே இவை இரண்டையும் சேர்க்கையில் ஈடுபட வைத்து இந்த சிறுத்தைக் குட்டிகள் பிரசவமாகியுள்ளன.
[You must be registered and logged in to see this image.]தாயும் குட்டிகளும் நலமாக இருப்பதாலும், தாய் குட்டிகள் மீது பாசத்தைப் பொழிவதாலும் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த இனத்தைச் சேர்ந்த பனிச் சிறுத்தைகள் இமாலய மலைப் பிரதேசத்தில் ஆறாயிரம் மீட்டர் உயரத்திலும், மத்திய ஆசியப் பகுதிகளிலும் வாழ்பவை.
[You must be registered and logged in to see this image.]சீன மருத்துவத்தில் இந்த வகை சிறுத்தைகளின் இரத்தம், உடல் பாகம் என்பனவற்றுக்கு நல்ல மவுசு உள்ளது.
அதனால் மனிதர்கள் இவற்றை வேட்டையாடத் தொடங்கியதால் இதன் இயல்பான வாழ்விடப் பிரதேசத்தில் அதன் இருப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
[You must be registered and logged in to see this image.]