உலகின் அரியவகைப் பறவையினங்கள் இதோ! (பட இணைப்பு) [You must be registered and logged in to see this image.]உலகின் மிக அரியவகைப் பறவைகளைப் படம் பிடிக்கும் போட்டிபற்றி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
உலகின் அரிய வகைப் பறவைகள் திட்டம் என்ற அமைப்புதான் இந்தப் போட்டியை நடத்துகின்றது. இது 2010ல் ஆரமபிக்கப்பட்ட ஒரு போட்டி.
பூமியில் அழிந்து போகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள 566 வகை பறவையினங்களைப் படம் பிடித்து வைப்பது தான் இந்தப் போட்டியின் முக்கிய குறிக்கோள்.
இவற்றின் படங்களையும் பண்புகளையும் உள்ளடக்கியதாக விவரமான ஒரு புத்தகத்தை வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
[You must be registered and logged in to see this image.]இதுவரை ஆயிரக்கணக்கான படங்கள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன. இவற்றுள் தெரிவு செய்யப்படும் சில நூற்றுக்கணக்கான பறவைகளின் படங்கள் 2012ல் வெளியிடப்படவுள்ள புத்தகத்தில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளன.
[You must be registered and logged in to see this image.]இந்தப் புத்தகம் விற்பனைக்கு விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உலகளாவிய ரீதியில் பறவைகள் பாதுகாப்புக்குச் செலவிடப்படவுள்ளன. இந்தப் பேட்டியில் வெற்றிபெற்ற சில புகைப்படங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
[You must be registered and logged in to see this image.]