கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Empty
PostSubject: ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்    ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Icon_minitimeTue May 31, 2011 11:35 am

ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்  Gmail_001மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும் பலரும் அதன் பாதுகாப்பு விடயங்களில் கவனமாக இருப்பதில்லை. ஒன்றுக்கு இரண்டாக மின்னஞ்சல் இல்லாதவர்கள் எவரும் உலகில் இல்லை.
நமது மின்னஞ்சல்களில் தான் முக்கியமான விவரங்கள் எல்லாம் வைத்திருப்போம். பல தளங்களில் Registration செய்த தகவல்கள், சமுக வலைத்தள விவரங்கள் மேலும் பல முக்கியமான மின்னஞ்சல்களும் வைத்திருப்போம்.
திடீரென்று உங்கள் மின்னஞ்சல் கணக்கை எவராவது சில சமயம் நண்பர்கள் கூட களவாடலாம்(hacking gmail). சரியான கடவுச்சொல் தானே வைத்திருக்கிறோம் என்று நினைத்து விட்டு விட்டால் களவாடப்பட்ட பின் புலம்ப வேண்டியது தான்.
ஜிமெயில் சேவைக்கு சரியான கடவுச்சொல் வைத்தால் மட்டும் போதாது. மேலும் சில விடயங்களைச் செய்தும் சரியாக கவனித்தும் வந்தால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும்.

1. இணையதள முகவரியை சரிபாருங்கள்: இணையத்திருடர்கள் ஜிமெயிலின் முகப்புப்பக்கம் போலவே செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் லொகின் செய்தவுடன் வேறொரு தளத்திற்கு இழுத்துச் சென்று உங்கள் தகவல்கள் திருடப்படலாம். எனவே [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் தான் செல்கிறீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

2. பொது இடங்களில் பயன்படுத்துவதைத் தவிருங்கள்: Keyloggers எனச் சொல்லப்படும் மென்பொருள்கள் நீங்கள் தட்டச்சிடும் போது எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டு அதன் சர்வருக்கு உங்கள் தகவல்களை அனுப்பி விடும். எனவே உங்களுக்குத் தெரியாமல் இணைய செண்டர்களில் நிறுவப்பட்டிருந்தால் போயிற்று. எனவே முடிந்தவரை பொது இடங்களில் பயன்படுத்தாதீர்கள்.

3. இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு Forward செய்தல்: ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் உங்கள் மின்னஞ்சல்களை இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு திருப்பி விட முடியும்(Forwarding mails). எனவே இரண்டாவது ஜிமெயில் ஒன்றை உருவாக்கி அதில் முதன்மை மின்னஞ்சல்கள் எல்லாமே வருகிற மாதிரி அமைக்கலாம். பொது இடங்களில் பயன்படுத்துகிற போது இரண்டாவது ஜிமெயில் கணக்கை உபயோகிக்கலாம். Settings -> Forwading and Pop/Imap.

4. நாள்தோறும் ஜிமெயிலின் Account Activity கவனித்தல்: Account Activity ஜிமெயிலின் சிறப்பான சேவை. இதன் மூலம் எந்தெந்த உலவியில் எந்த நேரத்தில் எந்தெந்த ஐ.பி அட்ரஸ்களில் பயன்படுத்தியுள்ளார்கள் என்று தெரியும். ஒரே இடத்தில் பயன்படுத்தினால் ஒரே IP Address தான் இருக்கும். சந்தேகப்படுமாறு பயன்படுத்தப்பட்டிருந்தால் Sign out All other Sessions என்பதைக் கொடுத்து முறையாக வெளியேறுங்கள்.

5. தேவையில்லாத Filter இருக்கிறதா எனப் பாருங்கள்: Filter மூலம் குறிப்பிட்ட மின்னஞ்சல்களையோ அல்லது அனைத்து மின்னஞ்சல்களையோ Forward செய்தல், அழித்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம்.
நீங்கள் ஜிமெயில் கணக்கிலிருந்து சரியாக வெளியேறாமல் இருந்திருக்கலாம். நண்பர்களே உங்களின் கடவுச்சொல்லை அறிய முயற்சிக்காமல் Filter என்பதைக் கொடுத்து விடலாம். இப்போது உங்களுக்கு வரும் எல்லா மின்னஞ்சல்களும் உங்கள் நண்பருக்கும் போகும். இது புது வகை. அதனால் தேவையில்லாத Filter இருக்கிறதா எனச் சரிபாருங்கள். Settings -> Filters.

6. சந்தேகமான சுட்டிகளைக் கிளிக் செய்யாதீர்கள்: சில நேரம் உங்களுக்கு [You must be registered and logged in to see this link.] இலிருந்து மெயில் வந்துள்ளது. உங்கள் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமானால் கீழே கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிப்பு வரலாம்.
உங்கள் கடவுச்சொல்லை கேட்கும் எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள். ஏனெனில் ஜிமெயில் இதுமாதிரி உங்களிடம் கேட்பதில்லை. பலவகையான ஏமாற்று மின்னஞ்சல்கள் இதைப் போல செயல்படுகின்றன.

7. உங்கள் கடவுச்சொல்லை வலிமையாக்குங்கள்: உங்கள் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துகளாவது இருக்கவேண்டும். கட்டாயம் எழுத்துகளில் எண்களையும் பயன்படுத்துங்கள். உங்கள் மொபைல் எண், பெற்றொர் பெயர், உறவினர் பெயர் போன்றவற்றை வைக்காதீர்கள். கடவுச்சொல்லை எங்கேயும் எழுதவோ கணணியில் குறித்தோ வைக்காதீர்கள்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பேஸ்புக்கில் பாதுகாப்பு வழிகள்
» சமையல் அறையில் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி ?
» பென்டிரைவை பாதுகாக்க சில வழிகள்
» பென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள்
» தொப்பையை குறைக்க சில வழிகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய பாதுகாப்பு.-
Jump to: