உணவு வயிற்றை நிறைப்பதற்கு மட்டுமில்லை, ஒரு நாளைக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது.
இந்த சக்தியைக் கொடுக்கும் உணவுகள், உடலுக்கு பலத்தை கொடுப்பதோடு உடலை பல நோய்களை தாக்காமலும் பாதுகாக்கிறது.
இஞ்சிசளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற மருந்துபொருள். சளி இருக்கும் பட்சத்தில், ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இல்லையெனில் அதனை டீ போட்டும் செய்து குடிக்கலாம்.
தேன்தேனில் நிறைய ஆன்டிசெப்டிக் பொருள் நிறைந்துள்ளது. எனவே இந்த தேனை அரிப்பு, காயம் அல்லது வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் வைத்தால், அவை சரியாகிவிடும்.
மிளகாய்மிளகாயில் உள்ள காப்சைசின் என்றும் பொருள், உடலில் வலி ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் மிளகு சாப்பிட்டால், மூட்டு வலி குணமாகும்.
பாகற்காய்பாகற்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அவை இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைக்கும்.
வாழைப்பழம்சருமத்தில் மருக்கள் அதிகம் இருந்தால், அவை உடல் அழகையே கெடுத்துவிடும். ஆனால் அந்த மருக்களை வாழைப்பழம் நீக்கிவிடும். ஏனெனில் அந்த பழத்தில் பொட்டாசியம் இருப்பதால், அவை மருக்களை நீக்கிவிடும்.
தர்பூசணிஉடலுக்கு போதுமான நீர்ச்சத்தானது இல்லையெனில் அவை வறட்சியடைந்துவிடும். அதிலும் தர்பூசணியில் 60 சதவீதம் தண்ணீரானது உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடல் வறட்சியைத் போக்கலாம்.
வெண்டைக்காய்வெண்டைக்காயை நறுக்கி இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.