பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய புதிய கிரகம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சூரியக்குடும்பத்துக்கு வெளியே எண்ணற்ற புதிய கிரகங்கள் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி வரை 854 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாசா விஞ்ஞானிகள் கெப்லர் விண்வெளி டெலஸ்கோப் மூலம் சமீபத்தில் ஆய்வு செய்தனர். இதில் மொத்தம் 2300 கிரகங்கள் இருக்க சாத்தியமுள்ளது என கண்டறிந்துள்ளனர்.
இதில் ஒன்று பூமியை போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு உரிய சூழ்நிலைகளுடன் காணப்படும். விரைவில் இந்த கிரகத்தை கண்டுபிடிப்போம் என விஞ்ஞானி அபேல் மெண்டேஷ் தெரிவித்துள்ளார். இவர் பியர்போ நிகோ பல்கலைகழகத்தில் கோள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.