ஸோரியாசிஸ் (psoriasis) இது ஒரு சரும நோய். இந்த நோய் வம்சா வழியாக
வரும் வாய்ப்பு அதிகம். தலையில் உள்ள பொடுகு சிலவேளை ஸோரியாசிஸ் ஆக
இருக்கலாம். சிலர் பொடுகுதானே எனக் கருதிக் கொண்டு மருந்து
எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவது வழக்கம். இது கூடாது.
பொடுகுக்கும் ஸோரியாஸிசுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன.
பொடுகு தலை அடி சருமத்தை பாதிக்காது. அதனுடைய துகள்கள் மிகவும் சன்னமாகவும், தூசி போலவும் இருக்கும்.
இதற்கு மாறாக ஸோரியாஸிஸ் ஏற்பட்டால் தலைமுடியில் உள்ள அடிச்சருமம்
பாதிப்படையும், சருமம் தடிப்பாகவும், ரோஸ் நிறத்திலும் இருக்கும். இதில்
வரும் துகள்கள் பருமனாகவும், மெழுகிலிருந்து உருகி வருதை உரித்தாற் போல்
காணப்படும்.
பொடுகுக்கு உரிய ஷாம்பூவோ அல்லது மருந்தையோ உபயோகித்தால் அது குணமாகி விடும்.
ஆனால் ஸோரியாஸிசை ஸ்டீராய்டு கொண்ட திரவங்கள் மற்றும் Salicylix அமிலம் கொண்ட ஷாம்பூக்களால் மட்டுமே குறைக்க இயலும்.
நடுத்தர வயதினருக்கு கை மூட்டு, கால் மூட்டு மற்றும் பிருஷ்டம் ஆகிய
இடங்களில் தோல் பகுதியில் ஸோரியாஸிஸ் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த இடங்களில்
தோல் தடிப்பாகி பெரிய துகள்களாகி உதிரும்.
இரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் வலியைக்
குறைக்க பயன்படுத்தும் க்ஷசரகநன் போன்ற மாத்திரைகள் ஸோரியாஸிசை
அதிகப்படுத்தும். அடிபடும் இடங்களில் இந்த நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
குணப்படுத்தும் முறை:
உடம்பிற்கு ஸ்டீராய்டு ஆயின்மெண்ட் உபயோகப்படுத்தலாம். இது வீரியம்
குறைந்ததாக இருக்க வேண்டும். Liquid Paraffin மற்றும் மீன் எண்ணைகளை
உபயோகித்து சருமத்தை வழ வழ என வைத்துக் கொள்ளலாம்.
இதைத் தடுப்பதற்கு என்றே உள்ள மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம்.