பச்சை பீன்சில் அதிகளவில் தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அத்துடன் எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.
100 கிராம் பீன்ஸில் 9 சதவீதம் ஆர்.டி.ஏ நார்ச்சத்து உள்ளது. ஆர்.டி.ஏ. என்பது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவை குறிப்பதாகும்.
நார்ச்சத்தானது பெருங்குடல், நோய் எதிர்ப்பு தன்மையுடன் இருப்பதற்கு உதவுகிறது, குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். மேலும் குறிப்பாக ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் குறைக்கும்.
மிக அதிக அளவில் வைட்டமின் ஏ பீன்ஸில் இருக்கிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது.
இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும்.
குறிப்பாக பீன்ஸில் உள்ள ஸி-சாந்தின், புறஊதாக் கதிர்களில் இருந்து கண்களின் ரெட்டினாவைக் காக்கிறது.
இதில் காணப்படும் வைட்டமின் சி, கிருமித் தொற்றுக்கு எதிராக உடலை காக்கக்கூடியது.
இத்துடன் ஆரோக்கியமான அளவில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இவை வளர்ச்சிதை மாற்றத்திற்கு மிகவும் அவசியமானது.
மாங்கனீசு நொதிகளின் செயல்பாட்டில் துணைக்காரணியாக செயல்படக்கூடியது.
பொட்டாசியம் தாதுஉப்பு செல் மற்றும் உடலில் ஈரத்தன்மைக்கு அவசியமானது. இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பங்கெடுக்கிறது.