விசேட விழாக்களில் பயன்படுத்தப்படும் வெற்றிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
1. வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு, லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத்திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
2. குழந்தைகளுக்கு வரும் சுரம், காய்ச்சல் போன்றவற்றிற்கு வெற்றிலைச் சாற்றில் கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும்.
3. வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இதனை 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும்.
4. வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி, கட்டிகளின் மேல் வைத்துக் கட்டவும். உடனே கட்டி உடைந்து சீழ் வெளிப்படும். குறிப்பாக இதனை இரவில் கட்டுவது நல்லது.
5. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.
6. வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
7. நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச் சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.
8. சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.