சில சமயங்களில் Gmail லில் எவருக்காவது மின்னஞ்சல் செய்யும்பொழுது, Send கொடுத்தபிறகுதான் நினைவுக்கு வரும், அதில் ஏதாவது தவறுகளோ அல்லது குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்பவேண்டிய மெயிலை வேறு எவருடைய விலாசத்திற்கோ அனுப்பிய விஷயம்.
உடனடியாக உலவியை க்ளோஸ் செய்வது, அல்லது இணைய கேபிளை நீக்குவது என டென்ஷனில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் அல்லாட வேண்டியிருக்கும். ஆனால் நீங்கள் என்னதான் செய்தாலும் மெயில் அனுப்பப்பட்டு விடும். இதற்கு ஜிமெயிலில் Undo வசதி இருந்தால் எப்படி இருக்கும்?
Google Labs வழங்கும் Undo send என்ற வசதி சில சமயங்களில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஜிமெயிலில் இந்த வசதியை உருவாக்க,
உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள், பிறகு வலது மேல் மூலையிலுள்ள Settings Link ஐ கிளிக் செய்து அதில் Labs லிங்கை கிளிக் செய்து, பட்டியலில் Undo send என்பதற்கு நேராக உள்ள enable என்பதை கிளிக் செய்யுங்கள்.
இனி send கொடுத்தபிறகு வரும் confirmation செய்தியில் Undo என்ற வசதி வந்திருக்கும். இதை கிளிக் செய்தால் போதுமானது.
ஆனால் இந்த வசதி நீங்கள் மெயிலை send கொடுத்தபிறகு ஐந்து விநாடிகள் மட்டுமே உங்கள் மெயிலை தடுத்து வைக்கும். ஏற்கனவே அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப பெறாது. (எதுவானாலும் கணினியை அணைப்பதை விட இது நல்ல முறையாக தெரிகிறது.)