முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையும் குறையும் என்பது தெரியவந்துள்ளது.
உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடத்தியது.
இதில் தெரியவந்த தகவல்கள், காலை உணவில் முட்டையை சேர்த்துக் கொண்டால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது. இது உடலில் ஆற்றலை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும்.
அதன்மூலம் மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது. அதனால் உடலில் கலோரிகள் குறையும்.
இவ்வாறு உணவுகளின் அளவு மற்றும் கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது.