கல்வி கற்க முற்படும் போது பல்கலைக்கழகம் பற்றி முழுமையாக அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பல்கலைக்கழகங்கள் பற்றிய விபரங்களை பொதுவாக இணையத் தேடல் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
இருப்பினும் உலக அளவில் அந்தப் பல்கலைக்கழகத்தின் தரநிலை என்ன என்பதை அறிந்துகொள்வது மிக அவசியமானது. நீங்கள் கல்வி கற்கப்போகும் பல்கலைக்கழகம், அது வழங்கும் சான்றிதழ் எவ்வளவு தூரம் பிரயோசயனமானது என்பதை நீங்கள் கீழ்கண்ட வழிமுறைகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
பல்கலைக்கழக தரவரிசையை அறிந்துகொள்ளல்
உலகளவில் பல்கலைக்கழகங்களின் தரவரிசையை அறிந்துகொள்வதற்கு இரண்டு இணையத்தளங்கள் உள்ளன. ஓன்று, QS World University Rankings என்று சொல்லப்படும் தளம். இதன் முகவரி
[You must be registered and logged in to see this link.] என்பதாகும்.
இது தவிர,TIMES உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப்படுத்தல் தளமும் உள்ளது. இந்தத் தளத்தை
[You must be registered and logged in to see this link.] என்ற முகவரியூடாக பார்வையிட்டு உலக அளவில் பல்கலைக்கழகங்களின் தரவரிசையை அறிந்துகொள்ள முடியும். இந்த இரண்டு தளங்களிலுமே இரண்டு வழிகளில் பல்கலைக்கழக தரவரிசைப்படுத்தலை பார்வையிடலாம்.
1. பல்கலைக்கழக பொது தரவரிசை
இது பொதுவாக உலகளவில், பல்கலைக்கழகத்தின் தரவரிசையை நிரல்படுத்திக் காட்டும். இதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகத்தில் நீங்கள் பயிலலாமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கலாம்.
2. கற்கைநெறி தரவரிசை
நீங்கள் கற்க விரும்பும் கற்கைநெறியைப் போதிப்பதில் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் உலகத் தரநிலையை இது காட்டும். நீங்கள் கற்க விரும்பும் துறையில் உங்களுக்குப் போதிய தராதரத்தையும், அங்கீகாரமுள்ள சான்றிதழையும் பெற்றுக்கொள்ள வழிகாட்டும்.
ஒரு முகவர் மூலம் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று மாணவர் விசா பெற முயன்றாலும், உங்களுக்கு அனுமதி பெற்றுத் தரப்படும். பல்கலைக்கழகத்தின் தரவரிசையை இந்த இணையத்தளங்களின் மூலம் அறிந்துகொண்டு மேற்கொண்டு முயற்சிகளை நீங்கள் தொடரலாம்.