உலகின் முன்னணி உலாவியாக வலம் வந்து கொண்டிருக்கும் கூகுளின் குரோம் உலாவியின் புதிய பதிப்பானது சில புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Windows, Mac, Linux மற்றும் Chrome OS போன்ற இயங்குதளங்களில் நிறுவிப் பயன்படுத்தக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பதிப்பில் வீடியோ கோப்புக்களை இலகுவாக பார்வையிடுவதற்காக GPU Accelerated எனும் புதிய அம்சம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வீடியோ கோப்பினை Decoding செய்வதற்காக CPU - இனை விடவும் குறைவான வலுவே நுகரப்படுகின்றது. இதனால் கணனிகளில் காணப்படும் மின்கலங்களின் பாவனையானது அதிகரிக்க ஏதுவாக அமைகின்றது.
இது தவிர இணையப் பக்கங்களை இலகுவாக பார்வையிடக்கூடியதாகவும், Geolocation, Pop-Up மற்றும் JavaScript போன்றவற்றினை இணையப் பக்கங்களில் எவ்விதமான அமைப்பு மாற்றங்களையும் (Settings) மேற்கொள்ளாது பயன்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
[You must be registered and logged in to see this link.]