கணணி இயங்குவதனை மிக வேகமாக கொண்டு வர தேவையற்ற கோப்புகளை முற்றிலுமாக நீக்க வேண்டும்.
நிறுவப்பட்ட புரோகிராம்கள், இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக கோப்புகள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி வன்தட்டில் இடம் ஏற்படுத்துவதுடன் விண்டோஸ் இயக்கத்தினையும் வேகமாகச் செயல்பட வைக்க நாம் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம்.
இதன் இன்னொரு சிறப்பு இதன் இயக்க வேகம் தான். மிக வேகமாக இயங்குவதுடன் இதில் எந்த விதமான ஸ்பைவேர் மற்றும் ஆட்வேர் இருப்பதில்லை.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பொக்ஸ், கூகுள் குரோம், ஆப்பரா, சபாரி, விண்டோஸ் ரீசைக்கிள் பின், ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் லிஸ்ட், தற்காலிக கோப்புகள் லாக் பைல்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரி ஆகியவற்றை இது சுத்தப்படுத்துகிறது.
அண்மையில் வெளியிட்டுள்ள பதிப்பில் காணும் புதிய வசதிகளில் கீழ்க்குறித்தவை முக்கியமானவைகளாகும்.
1. பயர்பொக்ஸ் சோதனைப் பதிப்பு 8 மற்றும் பதிப்பு 7.
2.நெட்வொர்க் பாஸ்வேர்ட் கிளீனிங்.
3. சபாரி மற்றும் கூகுள் குரோம் பிரவுசர் சுத்தப்படுத்துவது மேம்படுத்தப்பட்டுள்ளது.
4. புதிய அவாஸ்ட் மற்றும் ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் பதிப்பிற்கான கிளீனிங் வசதிகள்.
இவை தவிர பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன. download
[You must be registered and logged in to see this link.]