இறப்பில்லா வாழ்விற்கு இதோ 10 வழிகள்! 1. உங்கள் இலக்கங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் உடற்தொழிவு சுட்டெண் (BMI) 25ற்கு கீழ் இருக்கிறதா? கவலையை விடுங்கள்! நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்! அதேவேளை, இந்த BMI அளவு 25-29 வரை இருக்குமானால், ஏதோ பரவாயில்லை, உங்களது உருவமும் பார்க்க சுமாராக இருக்கும். BMI அளவு 29ற்கும் அதிகமாகிவிட்டதா? கவலைக்குரிய விடயம்தான். நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து அதீத கவனம் செலுத்த வேண்டியவராக உள்ளீர்கள்.
உங்களுடைய உடலின் குளுக்கோசின் அளவு உங்களுக்குத் தெரியுமா? தொடர்ச்சியாக இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதானது இதயத் தமனி சார்ந்த பகுதிகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல் நரம்பு மண்டலம், சிறுநீரகம், கண்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றையும் பாதிக்கிறது. குளுக்கோசின் அளவு மாறாட்டத்தின் காரணமாகத்தான் எம்மில் பலர் சர்க்கரை வியாதியுடன் சுற்றித் திரிகிறார்கள். இந்நோயானது இதய அடைப்பு, பாரிசவாதம், சிறுநீரகம் செயலிழப்பு போன்ற பாரதூரமான நோய்கள் ஏற்படும் பட்சத்தில் தான் வெளியில் தெரிகிறது. இதனை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டுமானால் கிழ்வரும் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் இரத்த அழுத்தத்தின் அளவை முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பதுடன் அடிக்கடி அதன் அளவை பரிசோதித்து அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய இரத்த அழுத்தத்தின் அளவு 130ஃ85 ஐ விட அதிகமாக இருப்பின் உடனடியாக பரிசோதனையின் முடிவுகளுடன் மருத்துவரை சந்தியுங்கள். அதிக இரத்த அழுத்தமானது ஒரு அமைதியான கொலையாளி. மீக்குருதியழுத்தமானது (Hypertention) சிறுநீரக செயலிழப்பு, இருதய பெருக்கம் உள்ளிட்ட பாரிய நோய்களை உண்டாக்கி திடீர் மரணத்திற்கு வழிகோலுகிறது.
இறுதியாக நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய இலக்கம் உங்கள் உடலின் கொலஸ்ட்ரோலின் அளவு தான்! இந்தக் கொலஸ்ட்ரோல் தான் இதய நோய்கள், பாரிசவாதங்களை ஏற்படுத்தி இள வயதில் இறப்பு சம்பவிக்க காரணமாகிறது.
2. உங்கள் உடலைக் கவனியுங்கள்
வழமைக்கு மாறாக உடலின் ஏதேனுமொரு பாகத்தில் வலி ஏற்பட்டால் உடனடியாக அதைக் கவனியுங்கள். மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் உடல் நலம் குறித்து முன்கூட்டியே அறிந்துகொண்டு உடனடி மருந்துப் பாவனைக்குத் தயாராகுங்கள். தொடர்ச்சியாக உடற்பரிசோதனைகளை மேற்கொள்வது சாலச்சிறந்தது.
3. செயன்முறையில் குறிப்பிடப்பட்டவாறு பயன்படுத்துங்கள்
வாழ்வில் பலவிடயங்கள் நல்ல காரணங்களுக்காக அறிவுறுத்தல்கள் வெளிவருகின்றன. இந்த அறிவுறுத்தல்கள் அடுத்தவரைப் பாதிக்காத வகையில்; நாம் எதனை எவ்வாறு செய்வது என கற்றுத்தருகிறது. மருந்துப் பாவனைகளின் போது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். அது உங்கள் நீண்ட நாள் வாழ்விற்கு வழிவகுக்கும்.
4. நல்ல சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள்
உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் சிறந்ததோர் வழிமுறையாகும். ர்ஐஏயானது பெருமளவில் பரவி வரும் இக்காலகட்டத்தில் தேவைப்படும்போது ஆணுறை பாவனையைக் கையாளுங்கள். 1981ஆம் ஆண்டிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 60 வீதமான எயிட்ஸ் நோயாளிகளில் பெருமளவானவர்கள் ஆணுறையைப் பாவித்திருப்பார்களாயின் நோய் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது என ஆய்வுகள் கூறுகின்றன.
5. கவனமாக வாகனங்களை செலுத்துங்கள்
நெடுஞ்சாலைப் பயணமானது உங்களை போக்குவரத்து நீதிமன்றத்திலும் நிறுத்தக்கூடும் சவக்கிடங்கிற்கும் அழைத்துச் செல்லக்கூடும், அவதானமாக இருங்கள்! வாகனங்களை செலுத்தும்போது சீட் பெல்ட் அணிய மறக்காதீர்கள். அதேவேளை, மோட்டார் பைக் ஓட்டும்போது ஹெல்மட்டை (தலைக்கவசம்) மறந்துவிடாதீர்கள். மதுபோதையில் வாகனத்தை செலுத்த வேண்டாம். பாதையின் விதிகளைக் கையாள மறக்க வேண்டாம்.
6. மறுத்துவிடுங்கள்
புகைப்பிடிப்பதுவும் சவக்கிடங்கிற்கு விரைவில் போவதற்கான வழிகளில் ஒன்று. புகைப்பிடிப்பதை நிறுத்த உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாகப் பெற்றுக்கொள்ளுங்கள். ஒரு சிறிய அளவான மது பாவனை நன்மை பயக்கும். ஆனால், அதிக பாவனை ஆபத்தில் கொண்டு விடும். அறுவுறுத்தப்பட்ட அளவிலேயே மருந்துப் பொருட்களை உட்கொள்ளுங்கள்.
7. போகும் பாதையைக் கவனியுங்கள்
உங்கள் நடத்தைகளைப் பற்றித் தொடர்ந்து சிந்தியுங்கள். சவக்கிடங்குகளில் தவிர்த்திருக்கக்கூடிய விபத்துக்களை கண்ணுற்றிருக்கிறோம். இறப்புச் சான்றிதழில் 5 வகையான இறப்பிற்கான காரணங்களே உள்ளன. 1. கொலை 2. தற்கொலை 3. இயற்கை மரணம் 4. விபத்து 5. தீர்மானிக்க முடியாதவை.; மேலதிகமாக ஒன்றை இணைத்துக்கொள்ள முடியுமாக இருந்தால் ‘முட்டாள்தனம்’ என்பதையும் இணைத்துக்கொள்ளலாம். சூழ்நிலைக்கேற்ப புத்தியைப் பயன்படுத்தியிருந்தால் விபத்துக்கள் பலவற்றையும் தவிர்க்க முடியும்.
8. இனிய நேரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்
வாழ்க்கையில் ஏற்படும் சுமைகளை ஜீரணித்துக்கொள்ள அன்றாடம் சிரிப்பு மாத்திரையைப் பயன்படுத்துங்கள். உடை அழுக்காகும் என்பதற்கான உல்லாசப் பயணங்களின்போது அழுக்குப்படாமல் இருந்துவிட்டு திரும்புவதைவிட மகிழ்ச்சியை அனுபவித்து அழுக்குடன் திரும்புவது மேலானது.
9. தனியாகப் போக வேண்டாம்
உறவுகள் வாழ்வில் இன்றியமையாதவை. உறவுகளைப் பேணும் மனிதர்கள் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ்கின்றனராம். குடும்பம், நண்பர்கள், அண்டை வீட்டார், உடன் பணிபுரிவோர் போன்றவர்களுடன் நல்லுறவைப் பேணும்போது உங்களது கடினமான நேரங்களில் ஒத்துழைக்க உங்கள் அருகில் பலர் இருப்பர். இந்த உறவுகள் தான் எமது வாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுக்கின்றன.
10. முக்கியமானதை நினைவுகூறுங்கள்
வாழ்வில் எது முக்கியமானது எதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது பற்றி நாம் அறிந்திருப்பது அவசியம். நான் எனது குடும்பத்தை மிகவும் நேசித்து குடும்பத்தவர்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறேன். அவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்குகிறேன். இது மிக நன்மையானது.
எத்தனை வருடங்கள் வாழ்ந்தீர்கள் என்பது முக்கியமல்ல வாழ்வில் என்ன செய்தீர்கள் என்பது தான் முக்கியம்.
நன்றி: வணக்கம்.