ஸ்மாட் போன்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலில்….. முன்னணி பாதுகாப்பு நிறுவனம் ஒன்று மல்வெயார் மற்றும் ட்ரோஜன்களால் அண்ட்ரோஜன் மற்றும் அப்பிள் டிவைசஸ் தாக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டுக்குள் 20ல் ஒரு அப்பிள் மற்றும் அன்ட்ரோய்ட் மொபைல்கள் அபாயகரமான மென்பொருட்களால் பாதிக்கப்படும் என பாதுகாப்பு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக கூகுளின் அன்ட்ரோய்ட் செயற்பாட்டு முறை குறித்து அக்கறை செலுத்தக் கூறியுள்ளார்.
நாம் என்றுமே பார்த்திராத அளவிற்கு பாவனையாளர்களுக்கு பிரச்சினையைக் கொடுக்கும் வகையிலான மொபைல் மல்வெயார்களை திருப்புவதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் மோசடிக்காரர்கள் பெற்றுள்ளனர்.
Zero-day என அழைக்கப்படும் தாக்குதலை மோசடிக்காரர்கள் ஆரம்பித்தார்களானால் 12 முதல் 24 மாதங்களுக்குள் 20இல் ஒரு அன்ட்ரோய்ட் போன்களும் iPads மற்றும் iPhones போன்றனவும் தாக்கப்படும் என முன் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.
அன்ட்ரோய்டின் பாதுகாப்பு கணிப்பொறிக் கட்டமைப்பாளர்கள் தற்போது சாவால்களுக்கு மத்தியில் இல்லை. மோசடிக்காரர்கள் எளிதாக application களை உருவாக்கி அதனை text messages, Voice, Web traffic போன்றவற்றின் மூலம் பரப்பி விடுவார்கள்.
இவ்வாறான மோசடிக்காரர்களின் application- களுக்கு உங்களுடைய அடையாளத்தைத் திருடி துஸ்பிரயோகம் செய்வதுடன் உங்களுடைய வங்கிக் கணக்குகளை முடக்குவதும் எளிதாகிவிடும்.
தீய application களைக் கண்டுபிடித்து தடை செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் எவையும் ஸ்டோர்களில் இல்லை. இருந்தாலும் கூகுள் அவ்வாறானவற்றை தன்னுடைய ஸ்டோர்களிலிருந்து நீக்கியுள்ளது.
இவ்வாறான தீய application களை இனங்கண்டு நீக்குவதற்கு அன்ட்ரோய்ட் மார்கெட்களுக்கு அதிக முன்னேற்றம் தேவைப்படுகிறது. நிதி ரீதியான மோசடித் திட்டங்கள் முன்னர் ஏனைய மொபைல்களைத் தாக்கி வந்தன. அவை தற்போது அன்ட்ரோய்ட் களத்திலும் தோன்றுகின்றன
நன்றி: வணக்கம்.