வேகம் குறைவான இணைய இணைப்பில் ஜிமெயில் மின்னஞ்சலைப் பயன்படுத்துவது எப்படி? கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் பல வசதிகள் இணைக்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் இணைய இணைப்பு நன்றாக உள்ள கணிணிகளில் தான் வேலை செய்யும்.
நீங்கள் மொபைல் மூலமாக அலல்து வேகம் குறைவாக உள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்தி ஜிமெயிலை அணுகும் போது எல்லா வசதிகளும் சேர்ந்து வருவதற்குள் திணறி நின்றுவிடும்.
இந்த சிக்கலின்றி ஜிமெயிலை அணுக இரண்டு வழிமுறைகளைப் பார்ப்போம்.
1. ஜிமெயிலில் Standard Version, Basic version என்று இரண்டு விதமான இடைமுகங்கள் இருக்கின்றன. Standard version என்பதில் தான் புதுமையான எல்லா வசதிகளும் இருக்கின்றன.
உதாரணத்திற்கு Google chat, Labs போன்றவையும் இணைந்தே ஆரம்பிக்கும். இதனால் தான் ஜிமெயில் தாமதமாகக் காரணம்.
இவைகள் இல்லாமல் மின்னஞ்சலை மட்டும் பாவிக்க நாம் சாதாரண பதிப்பில் செல்லலாம். இதனால் விரைவில் ஜிமெயில் பக்கம் திறக்கப்படும்.
இதற்கு கீழ் உள்ளவாறு தட்டச்சிட்டும் செல்லலாம். இல்லை இணைய உலவியில் இந்த முகவரியை புக்மார்க் செய்து கொள்ளலாம்.
இணைய முகவரி :
[You must be registered and logged in to see this link.]2. இரண்டாவதாக ஜிமெயிலை மொபைல் பதிப்பின் மூலமும் வேகமாக நுழைய முடியும். ஜிமெயிலை மொபைலில் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட மொபைல் இணையப்பக்கத்தை நாம் கணிணியில் பயன்படுத்தலாம்.
இது மொபைலில் பார்க்கிற மாதிரி குறைவான வசதிகளோடு இருக்கும். ஆனால் மின்னஞ்சலைப் பார்க்க முடியும், அனுப்ப முடியும். இணைய இணைப்பு குறைவான கணிணியில் இதன் மூலம் வேகமாக ஜிமெயிலை அணுக முடியும்.
இணைய முகவரி:
[You must be registered and logged in to see this link.] நன்றி: வணக்கம்.