*Admin Admin
Posts : 875 Join date : 22/04/2011
| Subject: குழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் Tue Jul 12, 2011 2:47 pm | |
| குழந்தைகளின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல் | | தொலைக்காட்சியில் வரும் வன்முறை நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதால், அவர்களின் தூக்கம் கெடுகிறது மற்றும் எதிர்கால வாழ்க்கையில் உடல் பருமன், பள்ளிக்கு செல்லாமை போன்ற மோசமான விளைவுகளும் ஏற்படுகிறது. பல தொலைக்காட்சி நிறுவனங்கள் குழந்தைகளுக்கு என தனி சேனலை கொண்டுள்ளன. இதில் குழந்தைகளை கவர்வதற்காக நாடகங்கள், திரைப்படங்கள், கார்ட்டூன்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. குழந்தைகளிடம் கவனம் எடுத்துக் கொள்வதில் பெற்றோர் சலிப்படைகின்றனர். எனவே தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் பழக்கி விடுகின்றனர். தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. அமெரிக்காவில் உள்ள சியாட்டில் குழந்தைகள் ஆய்வு நிறுவனம் மூன்று முதல் ஐந்து வயதுள்ள 600 குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. குழந்தைகள் தூங்கும் போது ஏற்படும் தீய கனவுகள், தூக்கத்தில் அலறுவது, இருட்டை கண்டு பயப்படுவது, சரியாக தூங்காததால் பகலில் நடப்பதில் சிரமம், சோர்வாக இருப்பது உள்ளிட்ட பிரச்னைகளை குறித்து வைக்கும்படி பெற்றொருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் மூன்று வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பகலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். வன்முறையை தூண்டும் வகையிலான நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதால் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே குழந்தைகள் இரவு 7 மணிக்கு மேல் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியையும் பார்க்காமல் இருப்பது அவர்களது ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும். சிறு வயதில் தூக்கத்தை பாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடந்து பார்ப்பது, அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் உடல் பருமன், பள்ளிக்கு செல்லாமல் இருப்பது போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. வளரும் குழந்தைகளின் தூக்கத்தை பாதிப்பதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கேலிச்சித்திரங்கள், நேரடி ஒளிபரப்புகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளிலேயே பெரும்பாலும் வன்முறையை தூண்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. ஏழு முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு என காட்டப்படும் நிகழ்ச்சிகளை மூன்று முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோரும் பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் காட்டப்படும் வன்முறை சம்பவங்கள் குழந்தைகளை வெகுவாக பாதிக்கின்றன. ஆனால் எவ்வளவு நேரம் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கின்றனர். அதில் எவ்வளவு நேரம் வன்முறை நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன என்பது குறித்து பெற்றோர் குறைவான மதிப்பீடு செய்கின்றனர் என்கிறார் ஆய்வாளர் மைக்கெல் காரிசன். மியாமி மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் நீனா மாலிக் கூறுகையில்,"பொதுவாக காட்டப்படும் நிகழ்ச்சிகளில் எது உண்மையானது, எது உண்மை இல்லாதது என்பது குறித்து குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியாது. எனவே இரவு நேரங்களில் வன்முறையை தூண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது" என்று எச்சரிக்கிறார். |
| |
|