வேலை நேரத்தில் இமெயில்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது? சில வேளைகளில் நீங்கள் உங்களுடைய இயலுமைக்கேற்ப வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆனால், மற்றவர்கள் அதை நோக்குகின்ற விதம் சரியானதாக இராது. நீங்கள் வேலைத்தளத்தில் இருக்கும் பொழுது எல்லாவற்றையுமே சுமூகமாக செய்து முடிக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. காரணம், அந்த கம்பனியுடைய எதிர்காலத்தில் நீங்களும் பொறுப்புடையவராக இருப்பது தான். எனவே, உங்களுடைய வார்த்தைகள் வேலையில் தாக்கங்களை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். பண்பாடற்ற இமெயில்கள் எவற்றையும் கண்டதும் உடனே பதில் அனுப்பாமல் பொறுமையாக அமர்ந்து முதலில் அதை நன்றாக வாசித்துப் பாருங்கள்.
உடனடியாக பதிலளிக்காதீர்கள்உடனடியாக பதிலளிக்க வேண்டிய இமெயில்கள் இல்லையென்றால் அவற்றை அடுத்த நாளுக்கு தள்ளிப் போடுங்கள். அந்த விடயம் தொடர்பாக உரிய முறையில் நீங்கள் தொழில் ரீதியாக எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து சிந்தியுங்கள். நீங்கள் என்ன செய்வதாக இருந்தாலும் உடனடியாக மறுமொழி செய்யாதீர்கள். நீங்கள் சில வேளை ஆத்திரப்பட்டு எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிவிடக்கூடும். எனவே அந்த இமெயிலுக்கு பதிலளிப்பதை அடுத்த நாளைக்கு தள்ளிப்போட்டு வைத்துவிட்டு அமைதியாக இருங்கள்.
அமைதியாக ஆரம்பியுங்கள்ஒரு கொடூரமான இமெயில் ஒன்றினை உங்களுக்கு யாராவது அனுப்பி வைத்திருந்தால் உடனடியாக அவர்களுக்கு மறுமொழியனுப்பிவிடாதீர்கள். பொறுமையாக இருங்கள். சிலவேளை ‘உங்கள் தகவலுக்கு நன்றி’ என அனுப்பி வைத்துவிட்டு இருந்துவிட்டால் நீங்கள் அவர்களது கருத்துக்கு மதிப்பளிக்கின்றீர்கள் என்று காட்டிக்கொள்ள முடியும்.
தீர்வளித்தல்
சிலவேளைகளில் நீங்கள் ‘உங்கள் தகவலுக்கு நன்றி. சிறிது நேரத்தின் பின் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்’ என்று தெரிவிப்பது மிகச் சரியான செயற்பாடாக இருக்க முடியும். ஆனால், நீங்கள் ஒரு மோசமான அல்லது வஞ்சகமான இமெயில் ஒன்றிற்கு பதிலளிக்கும்போது அது உடன் பணிபரிவோரிடமிருந்து வந்திருந்தாலோ அல்லது வாடிக்கையாளர்களிடமிருந்து வந்திருந்தாலோ முதலில் நீங்கள் கனிவாய் பதிலளிக்க வேண்டும்.
அந்த நபர் குறித்த செயற்பாடு பற்றி கவலையடைந்திருப்பதை நீங்கள் புரிந்துகொள்வதாக முதலில் தெரிவித்து விட்டு பின்னர் உங்கள் திட்டத்தின் நோக்கம் பற்றி தெரிவிக்கலாம். உதாரணமாக: ‘எமது இந்த புதிய திட்டத்துடன் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை அறியும்போது கவலையடைகிறேன். ஆனால், எமது இலக்கு எல்லா நிறுவனங்களுக்கும் உதவி செய்வது தான்’ என்று தெரிவிக்க முடியும்.
நீங்களும் அவருக்கு முரட்டுத்தனமாக பதிலளிக்க விரும்பக்கூடும். ஆனால், அது தொழில் நெறிக்கு அழகல்ல.
நன்றி: வணக்கம்.