மெதுவாக இயங்கும் கணிணிகளின் வேகத்தை அதிகரிக்க சில வழிமுறைகள். கணிணி பயன்படுத்தும் பலருக்கும் பொதுவான பிரச்சினையாக இருப்பது கணிணி மெதுவாக இயங்குவது தான்.இதனால் நமது வேலை செய்யும் ஆர்வம் குறைந்து விடலாம். சில நேரம் வன்பொருளில் பிரச்சினை காரணமாகவோ அல்லது மென்பொருளின் பிரச்சினை காரணமாகவோ கணிணி மெதுவாக இயங்கலாம். இதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் கணிணியை வேகமாக இயங்க வைக்கலாம்.
கணிணி மெதுவாக இயங்கும் காரணங்கள்.
1. வன் தட்டில் போதிய காலியிடம் இல்லாமை
2. மோசமான கோப்புகள் / சரியாக அழியாத கோப்புகள்
3. தகவல்கள் பாதிக்கப்பட்டிருத்தல்
4. இயங்குதளம் முறையாக அப்டேட் செய்யமல் இருப்பது
5. டிவைஸ் டிரைவர் கோப்புகள் அப்டேட் செய்யாமல் இருப்பது
6. வன்பொருள்களின் பாதிப்பு
7. கணிணி அதிகம் சூடாகுதல்
8. நினைவகத்தின் திறன் பற்றாமை.
எப்படி சரி செய்வது?
1. கணிணியின் வன் தட்டில் உள்ள ஒவ்வொரு டிரைவிலும் குறைந்தது 500 Mb இடமாவது இருக்க வேண்டும். அதற்கு மேல் குறைந்தால் தேவையில்லாத மென்பொருள்களை நீக்க வேண்டும். மேலும் தேவையில்லாத கோப்புகளையும் நீக்கி விடுங்கள்
2. இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கும் சி டிரைவில் குறைந்தது 1 GB காலியிடம் இருக்குமாறு பாருங்கள். அப்போது தான் இயங்குதளம் கணிணி செயல்பாட்டின் போது பேக்கப் பைல்களை நிர்வகிக்க ஏதுவாக இருக்கும்.
3. கணிணி ஆரம்பித்தவுடன் தொடங்கும் செயல்பாடுகளை/ மென்பொருள்களைக் குறைத்து வைங்கள். (Startup Programs) இவை கணிணி பூட் ஆகும் நேரத்தை அதிகப்படுத்துகின்றன.
4. கணிணியில் அவ்வப்போது தற்போது இயங்கும் செயல்பாடுகளை Task Manager மூலம் கவனியுங்கள். இதில் தற்போது எவ்வளவு நினைவகம் செலவாகிறது என்பதையும் அறியலாம். தேவையில்லாத செய்லபாடுகளை நிறுத்தி விடுங்கள்.
5. நம்பிக்கையான ஆண்டிவைரஸ் மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் வைரஸ் போன்றவை உங்கள் கணிணியைப் பாதிக்காமல் இருக்க தினசரி கணிணியை ஒருமுறை சோதிக்கவும்.
6. கணிணியின் வன்பொருளில் பிரச்சினை இருக்கிறதா என கணிணியின் Device Manager இல் பார்த்து என்னவென்று சரி செய்தல் வேண்டும்.
7. கணிணியின் இயங்குதளத்தை அவ்வப்போது அப்டேட் செய்தல் வேண்டும். இதை முறையாகச் செய்தால் கணிணியை மேம்படுத்த முடியும்.
8. கணிணியின் சிபியுவானது அதிக வெப்பமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை சிபியுவின் உள்ளே இருக்கும் தூசுகளை அகற்ற வேண்டும்.
9. நினைவகத்தின் அளவினை அதிகப்படுத்துதல் கணிணியின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கும்.
நன்றி: வணக்கம்.