குடும்பத்தில் அங்கத்தவராகிவிட்ட மனிதக் குரங்கு! (பட இணைப்பு) 13 வயதான இந்த மனிதக் குரங்கின் பெயர் டிஜிட். பிரான்ஸின் தென் பகுதியில் உள்ள செயின்ட் மார்டின் லா பிலயின் மிருகக் காட்சிசாலையின் பொறுப்பாளராக இருந்த பியர் திவிலியன் மற்றும் அவரின் மனைவி எலயின் ஆகியோரின் செல்லப்பிராணி இந்த மனிதக் குரங்கு தான்.
இதை தங்களது மகள் என்று தான் இந்த தம்பதி அறிமுகம் செய்கின்றனர்.
இது குட்டியாக இருந்த போது அதன் தாயால் கைவிடப்பட்டு விட்டது.
அன்று முதல் பியர் திவிலியன் இதைப் பொறுப்பேற்று கவனித்து வருகின்றார்.
இப்போது அது அவருக்கு பிள்ளைபோல் ஆகிவிட்டது.
இந்தத் தமபதியோடு படுக்கையை கூட அது பகிர்ந்து கொள்கின்றது. அந்தளவு நெருக்கம்.