விண்டோஸ் 7 இயங்குதளத்தில் கிளாசிக் ஸ்டார்ட் மெனு வரவைக்கும் மென்பொருள். மைக்ரோசாப்டின் புதிய இயங்குதளமான விண்டோஸ் 7 பதிப்பு சிறப்பான இடைமுகத்துடனும் புதிய டிசைன்களுடனும் கண்ணைக் கவரும் வசதிகளுடனும் இருக்கிறது. இந்த வசதிகள் சிறப்பாக இருந்தாலும் சாதாரண பயனர்களுக்கு எளிதாகப் பயன்படுத்தும் படியாக இருப்பதில்லை.
கணிணியில் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் விரும்பாத ஒரு விசயம் இதன் ஸ்டார்ட் மெனுவாகும். விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் இருந்த கிளாசிக் ஸ்டார்ட் மெனு விண்டோஸ் 7 இல் கொடுக்கப்பட வில்லை. இதனால் பல கணிணி பயன்பாட்டாளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. புதிய வசதிகள் சிறப்பானவை என்றாலும் பழைய வசதியில் சிறப்பான ஒன்று தான் கிளாசிக் ஸ்டார்ட் மெனு ஆகும்.
[You must be registered and logged in to see this link.]இந்தக்குறையைப் போக்க இலவச மென்பொருளான Taskbar Classic Start Menu உதவுகிறது. இந்த மென்பொருள் ஸ்டார்ட் மெனுவை பழைய நிலைமைக்கு மாற்றாவிட்டாலும் கணிணியின் டாஸ்க் பாரில் அமர்ந்து கொள்கிறது. இதனை டாஸ்க் பாரில் கிளிக் செய்து கிளாசிக் மெனுவைப் பெற முடியும். இது சரியான மாற்று இல்லாவிட்டாலும் பழைய ஸ்டார்ட் மெனுவை விரும்புவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதனைத் தரவிறக்கி நிறுவியதும் முதல் தடவையாக சில அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். எப்படி காட்சியளிக்க வேண்டும், ஐகான்களின் அளவு, மெனு வரிசைகளின் அளவு போன்றவற்றை நாம் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]பின்னர் இந்த மென்பொருள் டாஸ்க் பாரில் System Tray இல் ஒரு ஐகான் போலத் தோன்றும். இதனைக் கிளிக் செய்து பழைய கிளாசிக் ஸ்டார்ட் மெனுவைக் காணலாம். உங்களிடம் பெரிய மானிட்டர் இருப்பின் பெரிய அளவிலான ஐகான்களை வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் சிறிய ஐகான்களாகத் தோன்றச் செய்வது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் மெனுக்கள் பெரிய ஐகான்களாகத் தோன்றினால் அவை மானிட்டரின் இடத்தை அடைத்துக் கொள்ளும்.
தரவிறக்கச்சுட்டி:
[You must be registered and logged in to see this link.]