கணிணியில் முக்கிய போல்டர்களுக்குப் பூட்டுப் போடும் மென்பொருள் Lock a Folder[You must be registered and logged in to see this link.]கணிணியில் வைத்திருக்கும் முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பது சிரமமான வேலையாகும். நண்பர்களோ அல்லது உறவினர்களோ நமக்குத் தெரியாமல் கணிணியைப் பயன்படுத்தும் போது அழித்து விடலாம். அல்லது முக்கிய கோப்புகளை காப்பி செய்து விடலாம். இதிலிருந்து பாதுகாக்க எதேனும் என்கிரிப்சன் மென்பொருள்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட போல்டர்களுக்கு கடவுச்சொல் கொடுத்து மறைத்து வைக்கலாம். கணிணியில் இந்த மாதிரி மறைக்க வெண்டிய போல்டர்களும் அதிகமாக இருக்காது. கணிணியில் குறிப்பிட்ட போல்டர்களை தகவல்களை வேறு யாரும் பயன்படுத்தாமல் இருக்க உதவும் ஒரு மென்பொருள் தான் Lock A Folder. இது முக்கியமான கோப்புகளை ரகசியமாக பாதுகாக்க உதவுகிறது.
இந்த மென்பொருளின் மூலம் முக்கிய போல்டர்களுக்கு கடவுச்சொல் கொடுத்து வேறு யாரும் பார்க்க முடியாத படி செய்யலாம்.இதில் சில விநாடிகளில் இந்த வேலையை எளிதாகச் செய்யலாம். மறைத்து வைக்கப்பட்ட போல்டர்களைப் பார்க்க சிலர் Folder Options சென்று Show all hidden files என்று கொடுத்துப் பார்த்து விடுவார்கள். இதில் அந்தப் பிரச்சினையே இல்லை. எப்படி முயன்று பார்த்தாலும் இந்த மென்பொருளின் மூலம் மறைக்கப்பட்டதைக் காண முடியாது.
[You must be registered and logged in to see this link.]இந்த மென்பொருளின் மூலம் முக்கியமான மூன்று போல்டர்களை மட்டுமே மறைத்து வைக்க முடியும். எந்தெந்தெ போல்டர்களை மறைக்க வேண்டுமோ அவற்றைத் தேர்வு செய்து கொடுத்தாலே போதுமானது. உடனே லாக் செய்யப்பட்டு விடும். இந்த மென்பொருள் எல்லாவற்றுக்கும் ஒரு மாஸ்டர் பாஸ்வேர்டு வைத்து கையாளுகிறது. இதனைக் கொடுத்தால் தான் பூட்டு போடப்பட்ட போல்டர்களைக் காண முடியும்
[You must be registered and logged in to see this link.]இந்த மென்பொருளைத் திறந்தவுடன் மாஸ்டர் பாஸ்வேர்டைக் கொடுத்து தான் உள்ளே போக முடியும். பின்னர் Lock a Folder என்பதில் சென்று உங்களுக்குத் தேவையான போல்டர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அடுத்து Lock it என்ற பட்டனைக் கிளிக் செய்தால் உடனே மறைத்து வைக்கப்படும்.
[You must be registered and logged in to see this link.]மறுபடியும் முக்கிய கோப்புகளைப் பார்க்க வேண்டுமெனில் கடவுச்சொல்லைக் கொடுத்து Unlock a Folder இல் சென்று தேவையான போல்டர்களைத் தேர்வு செய்து Unlock it என்று கொடுத்தால் பழைய நிலைக்கு வந்து விடும். முக்கிய போல்டர்களை ரகசியமாக வைக்க இந்த மென்பொருள் உதவும்.
தரவிறக்கச்சுட்டி:
[You must be registered and logged in to see this link.]